GV Prakash Saindhavi Divorced : தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் குமார்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தனது, மனைவியும், பிரபல பாடகியுமான சைந்தவியை பிரியவிருக்கிறார் என்கின்ற செய்தி அண்மையில் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல பாடகி சைந்தவியை ஜி.வி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் சகோதரியின் மகன் தான் ஜிவி பிரகாஷ் குமார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "வெயில்" என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

Parvati Nair : டீப் நெக் ஆடையில்.. ரசிகர்களை இம்சிக்கும் சிரிப்பில்.. அசத்தும் பார்வதி நாயர் - Latest Clicks!

இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 8க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் இசையமைத்து வருகிறார். இன்னும் நான்கு திரைப்படங்கள் அவருடைய இசையில் விரைவில் உருவாக உள்ளது. அதேபோல தனது 12வது வயது முதல் மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்து வருபவர் தான் சைந்தவி. கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழில் வெளியான விக்ரமின் அன்னியன் திரைப்படத்தில் வந்த "அண்டங்காக்கா கொண்டக்காரி" என்கின்ற பாடலை பாடியது சைந்தவி தான். 

Scroll to load tweet…

தொடர்ச்சியாக தமிழ் திரையுலகில் நல்ல பல பாடல்களை பாடியுள்ள அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் 11 ஆண்டுகள் கழித்து தங்களுடைய மன அமைதிக்காகவும், இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் ஒரு நல்ல முடிவை தாங்கள் எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

சனியன் சகடையா இப்படி? 81 வயதில் நடக்க கூட முடியாமல் ஓட்டு போட வந்த கோட்டா சீனிவாச ராவ்! கலங்க வைத்த போட்டோஸ்!