இந்தியா - இங்கிலாந்து மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - இங்கிலாந்து மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் கார்டிஃப் நகரில் இன்று நடைபெறுகிறது.
 
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த நிலையில், இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைபற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. 

ஆனால், இங்கிலாந்தோ இந்த தொடரை தக்க வைக்கவும், இந்த ஆட்டத்தில் வெல்லவும் தீவிரமாக களமிறங்கும். 

இந்த ஆட்டத்தில் வென்று தொடரை இந்தியா கைப்பற்றும் பட்சத்தில், தொடர்ந்து 6-வது டி20 தொடரை வென்ற பெருமையை இந்தியா பெறும். 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தால், 2-வது இடத்துக்கு முன்னேறும். இந்த ஆட்டத்தில் தோற்றால் இங்கிலாந்து 7-ஆவது இடத்துக்கு இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.