நான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படி மே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டுயுள்ளார். 

டெல்லி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் கருப்புதுணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’’தென்னைமரத்தில தேள் கொட்டினா பணை மரத்தில் நெரிகட்டுதே. இங்கு R(oad) S(ide) பாரதி இவங்கள ரெட் லைட் ஏறியானு சொன்னதுக்கு எந்த எதிர்ப்பையும் காணும். ஆனால் இவர்கள் ஒரு ரீட்வீட்டுக்கு எஸ்.வீ.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரம் செய்ததை மறக்க முடியுமா?

நான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படி மே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன். அதுமட்டுமல்ல அன்று எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரச் செயலில் ஈடுபட்டவர்கள் இன்று எங்கே. அந்த மானஸ்தர்களின் பெயர் விரைவில்.

முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்’’என அவர் தெரிவித்தார்.