MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரத்னம் படத்துக்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ்... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை

ரத்னம் படத்துக்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ்... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை

ரத்னம் முதல் ஒரு நொடி வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2024, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரத்னம்

ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஒரு நொடி

ரத்னம் படத்துக்கு போட்டியாக களமிறங்கியுள்ள மற்றொரு திரில்லர் திரைப்படம் தான் ஒரு நொடி. இப்படத்தில் தமன்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை மணிவர்மன் இயக்கி உள்ளார். எம்.எஸ்.பாஸ்கரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும் ஏப்ரல் 26-ந் தேதி திரைக்கு வருகிறது.

35

சிறு பட்ஜெட் படங்கள்

ரத்னம், ஒரு நொடி மட்டுமின்றி இங்கு மிருகங்கள் வாழும் இடம், கொலைதூரம் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் நாளை திரைக்கு வர உள்ளது. இதில் இங்கு மிருகங்கள் வாழும் இடம் திரைப்படத்தை எஸ்.சசிகுமார் இயக்கியுள்ளார். பைன் ஜான் ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல் கொலை தூரம் திரைப்படத்தை பிரபு இயக்கி உள்ளார். யுவன் பிரபாகரன் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Tamannaah : காசுக்கு ஆசைப்பட்டு Case-ல் சிக்கிய தமன்னா... விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன்

45

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

இடி மின்னல் காதல் மற்றும் வெப்பம் குளிர் மழை ஆகிய தமிழ் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் இடி மின்னல் காதல் திரைப்படத்தில் பிக்பாஸ் சிபி ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல் வெப்பம் குளிர் மழை திரைப்படத்தை பேஸ்கல் வேதமுத்து இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் 26-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளன.

55

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த பேமிலி ஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும், அனுபமா பரமேஸ்வரன் நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் பீமா திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கன்னடத்தில் யுவா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது. இந்தியில் யாரியான் 2 ஜியோ சினிமாவிலும், கிராக் ஹாட்ஸ்டாரிலும், தில் தோஸ்தி தில்லெம்மா அமேசான் பிரைமிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Bala : பீல்ட் அவுட்டான பூஜா.. ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய இவானா.. இயக்குனர் பாலாவால் டார்ச்சருக்கு உள்ளான 5 நடிகைகள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved