MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamannaah : காசுக்கு ஆசைப்பட்டு Case-ல் சிக்கிய தமன்னா... விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன்

Tamannaah : காசுக்கு ஆசைப்பட்டு Case-ல் சிக்கிய தமன்னா... விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன்

சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பிய விவகாரத்தில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக உத்தரவிட்டு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 25 2024, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 17-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பதால், அதன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றி பல்வேறு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நடக்கும். அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வியாகாம் நிறுவனம் தங்களது ஜியோ சினிமா செயலியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. தங்களின் உரிமை பெறாமல் சட்டவிரோதமாக ஃபேர்பிளே செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாவதை அறிந்த வியாகாம் நிறுவனம் சம்பந்தப்பட்ட செயலி மீது வழக்கு தொடர்ந்தது.

இதையும் படியுங்கள்... Manjummel Boys : போட்ட 7 கோடியும் போச்சு.. என்ன ஏமாத்திட்டார் - Manjummel Boys தயாரிப்பாளர் மீது பகீர் புகார்!

34

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைதாகி உள்ள நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இந்த வழக்கில் விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார். ஏனெனில் ஃபேர்பிளே செயலியை விளம்பரப்படுத்திய காரணத்தால் அவரிடமும் விசாரணை நடத்த முடிவெடுத்த மும்பை சைபர் கிரைம் போலீசார் அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. தமன்னா ஏப்ரல் 29-ந் தேதி ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

44

இதற்கு முன்னதாக அந்த செயலியின் விளம்பரத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத்துக்கும் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை தமன்னாவுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால், அவர் ஆஜாராவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Bala : பீல்ட் அவுட்டான பூஜா.. ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய இவானா.. இயக்குனர் பாலாவால் டார்ச்சருக்கு உள்ளான 5 நடிகைகள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மும்பை
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved