பாஜக - திமுக கூட்டணியா.? ரொம்ப தப்பு.. அதிமுக, திமுகவை வெளுத்து வாங்கிய வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்
தமிழகத்தில் பாஜகவுக்கு திமுக இடையே ஏழாம் பொருத்தம். பாஜக திமுக கள்ள உறவு வைத்துள்ளது என்று அதிமுக இன்பதுரை கூறியது அரசியலுக்காக சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளார் பால் கனகராஜ்.
சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை பாஜக வேட்பாளர் மற்றும் தமிழ்நாடு மாநில துணை தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ மோடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பேச்சை தவறாக காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் பரப்பி வருகிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதி காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பிரிவினை வாத அரசியலை முன்னெடுக்கிறது, தாஜா அரசியலை முன்னெடுக்கின்றது. நாடு சுதந்திர பெறும்போது ஜின்னிவின் முஸ்லிம் லிக்கால் நாடு பிளவு கண்டது. காங்கிரஸ் பிரினை ஏற்படும் வகையில் செயல்படுகிறது. உழைக்கும் மக்களிடம் இருந்து சொத்துக்களை பிடுங்கி வேறு யாரிடமும் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது என்று தான் கூறியிருந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தி மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படும். இந்த செயல்பாடு பிரிவினை வாதத்தை தான் ஏற்படுத்தும் என்று பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்டவர்களை தாஜா செய்யும் வகையில் இருக்கிறது.
எல்லா மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இல்லை என்று மோடி பேசினார். தமிழகத்தில் பாஜகவுக்கு திமுக இடையே ஏழாம் பொருத்தம். பாஜக திமுக கள்ள உறவு வைத்துள்ளது என்று அதிமுக இன்பதுரை கூறியது அரசியலுக்காக சொல்லியுள்ளார். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சி பாஜக” என்று கூறினார்.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?