வறட்சி காரணமாக உயிரிழந்த  80 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவ மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: 

நேரு பல்கலை கழகம் புகழ்பெற்ற பல்கலை கழகம் ஆகும் இங்கு திட்டமிட்டு ஜாதிய ஒடுக்குமுறை ஏற்படுத்தப்பட்டூ வருகிறது. தலித் அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறர்கள் , மதிப்பெண் குறைத்து போடுவது. அவர்கள் செயல்பாட்டை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல.

உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளது , ஜாதி , மொழி , மதம் பெயரால் அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அப்படி நடவடிக்கைகளை தவிர்த்திடும் வகையில் அளிக்கப்பட்ட  வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை விசிகே வரவேற்கிறது. இதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ டசட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் 

வடகிழக்கு பருவமழை பொய்த்த காரணத்தால் 80 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் இதுவரை  இழப்பீடு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு  தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் ,ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு , விவசாய கூலிகள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தமிழ் சமூகத்தின் பாரம்பரிய மரபு ரீதியான  விளையாட்டு , ஆனால் விலங்குகள் வதை என்பதாக அதை  முடக்கி வைத்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கு என்று அதற்கு அனுமதி மறுப்பது வேதனை தருவதாகும். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் விலங்குகள் வதையின் கீழ் வராது. மனித வதை என்று வேண்டுமானால் கூறலாம். காளை மாட்டை அடிக்கவோ துன்புறுத்தவோ நடப்பதே இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.