அமேதியில் மே 2ஆம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார்: இளைஞர் காங். தலைவர் தகவல்
காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் உ.பி.யில் முறையே ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் மே 2ஆம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அமேதி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுபம் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் உ.பி.யில் முறையே ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், சுபம் சிங் இதனைக் கூறியுள்ளார்.
உ.பி. முன்னாள் எம்.எல்.சி.யும், காங்கிரஸ் தலைவருமான தீபக் சிங் கூறுகையில், "ஏப்ரல் 26ஆம் தேதி ராகுல் காந்தி வருவார். ஸ்மிருதி இரானி அச்சத்தில் இருக்கிறார். சுப முலகூர்த்த நேரத்தில் ராகுல் காந்தி இங்கே வருவார் என அனைவரும் நம்புகிறோம். இந்த முறை, அமேதியில் வெற்றி பெற்று, எம்.பி., ஆகவும் பிரதமராகவும் வரும் வருவார் என்று அனைவரும் நம்புகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
இலவச லேப்டாப் திட்டம் பற்றிய தகவல் தவறானது: இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விளக்கம்
நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவது பற்றி ஏப்ரல் 26ஆம் தேதிக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. சென்ற முறை வயநாட்டிலும் அமேதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் இப்போது வரை வயநாட்டில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தி இரண்டாவது முறையாக போட்டியிடும் வயநாடு தொகுதியில் இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இப்போது அதே தொகுதியில் ஸ்மிருதி இரானி மீண்டும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 17 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி மீதமுள்ள 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி தனது பாரம்பரிய கோட்டைகளாகக் கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் தவிர, வாரணாசி, காசியாபாத் மற்றும் கான்பூர் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
ஐசிஐசிஐ வங்கி மொபைல் செயலியில் கோளாறு: 17,000 கிரெடிட் கார்டுகளின் பாதுகாப்பில் ஓட்டை!