கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று  குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து  செய்வது தொடர்பாக 11 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குடியுரிமை சட்டத்தால் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து இந்தியர்களிடையேயும் ஒற்றுமையே என்பது தேவை. என கூறியிருந்தார்.

கேரளாவில் டிசம்பர் 31 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யுமாறும், அது மதச்சார்பற்ற சான்றுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. 

குடியுரிமை சட்டத்துக்கு 11 மாநிலங்கள் உட்பட பல முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் குடியுரிமை சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தமாட்டேன் என்பதில் மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக இன்று சிலிகுரியில் பேரணி நடந்தது.

இதில் மம்தா பேசுகையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும். "நான் குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுகிறேன், என்னுடன் கைகோருங்கள். எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற அனைத்து மக்களும் முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.


மேலும் ஆளும் முன்னணி  மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே ஆதரித்து அத்தகைய தீர்மானத்தை முதலில் நிறைவேற்றிய மாநிலமாக கேரளா உள்ளது. தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத், கேரள அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் விஜயன், சிறந்த சட்ட ஆலோசனையை பெற வேண்டும். என்றார்.

இந்நிலையில் கேரளா,  மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச்  சட்டத்தை எதிர்க்கிறார்கள். அந்த  மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.