நீங்க தினமும் பெல்ட் யூஸ் பண்றீங்களா..? அப்ப கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க.. ஏன் அப்படி?
இன்றைய காலகட்டத்தில், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பெல்ட் அணிகிறார்கள். ஆனால், அதை ரொம்ப இறுக்கமாக போட்டால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா..?
இன்றைய காலத்தில் காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை மாற்றி கொள்கிறார்கள்.. ஒரு காலத்தில் தேவைக்கும் மட்டுமே பெல்ட் அணிவார்கள். ஆனால், இப்போது பெல்ட் அணிவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இன்னும் சொல்ல போனால், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பெல்ட் அணிகிறார்கள்.
சிலருக்கு மிகவும் இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கமும் இருக்கும். ஆனால், இது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தெரியுமா..? பெல்ட் மட்டுமல்ல, பேண்ட்டையும் இறுக்கமாக போட்டால் பல பிரச்சினைகள் வரும். சரி... இப்போது பெல்ட் இறுக்கமாக போட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இறுக்கமாக பெல்ட் அணிந்தால், நரம்பு பிரச்சினைகள் அதிகரிக்கும். இது கீழ் முதுகு அல்லது அடிவயிற்றில் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இறுக்கமாக பெல்ட் அணிவது இரத்த நாளங்களில் இரத்த விநியோகத்தை தடுத்து, வயிற்று தசைகள் வேலை செய்வதை நிறுத்துகிறது.
அதுபோல, இறுக்கமாக பெல்ட் அணிந்தால், நெஞ்செரிச்சல் மற்றும் அமில பிரச்சினைகள் அதிகரிக்கும், உண்மையில், இறுக்கமான பெல்ட் அணிந்தால் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டைக்குள் சென்று, அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: Walking Mistakes : தினமும் நடந்தும் உடல் எடையை குறைய முடியலயா..? காரணம் இதுதாங்க..
இறுக்கமாக பெல்ட் அணிந்தால், இடுப்பு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், இறுக்கமாக பெல்ட் அணிந்தால், முதுகு எலும்புகளை பாதிப்பதால், முதுகுவலி வர வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி, சிஸ்டிக் நரம்பு போன்ற பல நரம்புகள் உங்கள் இடுப்பைச் சுற்றிச் செல்வதால், கால்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் உடலில் பல பிரச்சனைகளும் வரும்.
இதையும் படிங்க: Health Tips : இளைஞர்களை குறி வைக்கும் ஆபத்தான 3 நோய்கள்.. கவனமாக இருங்கள்!
மேலும், இறுக்கமாக பெல்ட் அணிந்தால், முதுகெலும்பு விறைப்பை ஏற்படுத்தும். இதனால் முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் ஏற்படும்..அதுமட்டுமின்றி, இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D