Actress Aditi Rao Hydari : பிரபல நடிகை அதிதி ராவ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள புதிய இணைய தொடரான "ஹீரமண்டி" பிரபல Netflix தலத்தில் வெளியாகவுள்ளது. அது தொடர்பான விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலியின் "ஹீரமண்டி : தி டயமண்ட் பஜார்" என்ற இணைய தொடர், வரும் மே 1ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளிவர உள்ளது. அதற்கான பிரமாண்டமான பிரீமியர் விழா நேற்று ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை இரவு மும்பையில் நடத்தப்பட்டது. மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, சேகர் சுமன், ரிச்சா சதா, சஞ்சீதா ஷேக் மற்றும் ஷர்மின் சேகல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு இரவு நிகழ்விற்காக, அதிதி ராவ் ஹைதாரி ஒரு அழகான, பாரம்பரிய ஆடையான அனார்கலியை அணிந்திருந்தார். அவருடன் அவரது வருங்கால கணவர் நடிகர் சித்தார்த் அவர்களும் இந்த விஷேஷ நிகழ்வில் பங்கேற்றார். இந்நிலையில் வருங்கால கணவன் மனைவி, கைகளை கோர்த்துக்கொண்டு நிற்கும் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Bala : பீல்ட் அவுட்டான பூஜா.. ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய இவானா.. இயக்குனர் பாலாவால் டார்ச்சருக்கு உள்ளான 5 நடிகைகள்

அதிதி ராவ் ஹைடாரி மற்றும் பிரபல நடிகர் சித்தார்த் இப்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோவிலில், கடந்த மார்ச் 27ம் தேதி, அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடி தற்போது வரை தங்கள் திருமண நாளை அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

View post on Instagram

இந்த ஜோடி பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டாலும், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் உறவு நிலையைப் பற்றி பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். அதிதி ராவ் ஹைதாரி முதன்முதலில் தெலுங்கு நடிகர் சித்தார்த்தை 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். 

Tamannaah : காசுக்கு ஆசைப்பட்டு Case-ல் சிக்கிய தமன்னா... விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன்