சென்னையில் விற்கப்படும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக வந்த புகாரைஅடுத்து மேற்கொண்ட ஆய்வில் வேதிப்பொருள் கலந்து இருபது உறுதி ஆகியுள்ளது

முக்கிய மீன் சந்தைகள்

சிந்தாதிரிப்பேட்டை, காசிமேட்டில் வாங்கப்பட்ட மீன்களில் "பார்மலின்" கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள மிக முக்கிய மீன் விற்பனை சந்தைகளான சிந்தாதிரிபேட்டை, காசி மேட்டில் வாங்கப்பட்ட மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் சுறா, ஏரி வவ்வால் முக்கிய மீன்வகைகளில் 30 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு சோதனை செய்த 30 மாதிரிகளில் 11 மாதிரிகளில் பார்மலின கலந்திருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டது.

மீன்களில் பார்மலின் கலந்து  இருப்பதை கேரளா அரசு உறுதி செய்து உள்ளதால் தமிழக மீன்களுக்கு தடை விதித்து இருந்தது.

மேலும், மீன்களில் பார்மலின் இருப்பதை கண்டுப்பிடித்த தகவல் வெளியான பின்னர், சென்னை மீன் மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.