MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Belly Fat : வீட்டில் இருந்து வேலை செய்து தொப்பை வந்துட்டா..? அதை குறைக்க இதோ சில டிப்ஸ்!

Belly Fat : வீட்டில் இருந்து வேலை செய்து தொப்பை வந்துட்டா..? அதை குறைக்க இதோ சில டிப்ஸ்!

கடந்த சில வருடங்களாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த மோசமான விளைவுகள் காரணமாக வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கெட்ட கொழுப்புகள் இருக்கும். இதற்கான சில நடவடிக்கைகள் இங்கே.. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 01 2024, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கொரோனா வைரஸ் தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை செய்யப்படது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

26

ஆனால், தற்போது படிப்படியாக வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு கலாச்சாரம் போல நடைமுறைக்கு வந்துவிட்டது. சொல்ல போனால், 
அது இன்றும் தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை மிகவும் வசதியானது என்றும் கூட சொல்லலாம். குறிப்பாக, அலுவலகத்திற்கு செல்வதற்கான செலவும் சேமிக்கப்படுகிறது. ஆனால், இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வது எளிதாக இருந்தாலும், இளைஞர்களிடையே எடை அதிகரிப்பதற்கு இது மிகப்பெரிய காரணம் என்றே சொல்லலாம்.

36

வீட்டிலிருந்து வேலை செய்வது மக்களின் உடல் செயல்பாடுகளை கணிசமாகக் குறைக்கிறது. குறிப்பாக, இதனால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு அதிகரித்தால், அது போகவே போகாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்தாலும், எடையைக் குறைக்க சில குறிப்புகளை உங்களுக்கு இந்த கட்டுரையில் சொல்லப் போகிறோம். வாங்க் அதை குறித்து தெரிந்துகொள்ளலாம்..

46

அவ்வப்போது நடக்கவும்: நீங்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், உங்கள் வயிற்றில் சுற்றி தொப்பை இருக்கும். காரணம், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வதால் கொழுப்பு அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்து, கொஞ்சம் நடக்க பழகுங்கள். இதைச் செய்தால் உங்கள் எடை கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும். 

இதையும் படிங்க:  ஆண்களுக்கு அதிக தொப்பை இருக்க என்ன காரணம்..? குறைக்க வழிகள் உண்டா..?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

56

தண்ணீர் குடிக்கவும்: வீட்டில் இருந்து ஒரே இடத்தில் வேலை செய்யும் போது ஏதாவது சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக, உண்டாகும் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியாதது. எனவே, இதைத் தவிர்க்க, வேலை செய்யும் போது முடிந்தவரை அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள்.
அது பசியைக் குறைப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள், இது தொப்பை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பைக் குறைக்கும்.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பு கரைய..எடை குறைய.. யாரும் சொல்லாத ரகசியம்..!!

 

66

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்: வீட்டில் இருந்து வேலை செய்யும் போது எடை அதிகரிக்கும். எனவே, அதை பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாகவ்சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும் மற்றும் இது அதிக உணவை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உங்கள் எடை படிப்படியாகக் குறையத் தொடங்குவதை நீங்கள் காணலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved