Asianet News TamilAsianet News Tamil

EPS : சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துவதில் தமிழ்நாட்டை மைய்யமாக மாற்றிய திமுக அரசு- விளாசும் எடப்பாடி

சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 
 

EPS has criticized the DMK government for turning Tamil Nadu into a drug hub kak
Author
First Published May 17, 2024, 11:32 AM IST | Last Updated May 17, 2024, 11:32 AM IST

22 கோடி மதிப்பில் கொக்கைன் பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக திமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் 22 கோடி மதிப்பில் கொக்கைன் பொதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. 

தமிழகம்- போதைப்பொருள் மையம்

விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது.

சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு இந்த  விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Courtallam Falls : குற்றாலத்திற்கு போறீங்களா.? இதமான காற்றோடு அருவியில் தண்ணீர் கொட்டுது-இதோ லேட்டஸ்ட் அப்டேட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios