MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்று பாடகி இன்று சர்ச்சை ராணி... யார் இந்த ‘சுச்சி லீக்ஸ்' சுசித்ரா? அவரை சுற்றிய சர்ச்சைகள் ஒரு பார்வை

அன்று பாடகி இன்று சர்ச்சை ராணி... யார் இந்த ‘சுச்சி லீக்ஸ்' சுசித்ரா? அவரை சுற்றிய சர்ச்சைகள் ஒரு பார்வை

Suchi Leaks allegations : சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின்னர் தற்போது கோலிவுட் பிரபலங்கள் பற்றிய பல்வேறு அந்தரங்க தகவல்களை வெளியிட்டு அதிரவிட்டுள்ளார் சுசித்ரா. அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : May 17 2024, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Suchitra

Suchitra

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் சுசித்ரா. இவரின் தந்தை பெயர் ராமதுரை, தாயார் பெயர் பத்மஜா. இவருக்கு சுனிதா என்கிற சகோதரியும் உள்ளார். திருவனந்தபுரத்தில் BSc படித்த இவர், பின்னர் கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் எம்.பி.ஏ படித்தார். அங்கு படிக்கும் போதே மியூசிக் பேண்ட் ஒன்றிலும் பங்கெடுத்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக பணியாற்ற தொடங்கினார் சுசித்ரா.

அதில் அவர் நடத்திய ஹெலோ சென்னை மற்றும் பிளைட் 983 ஆகிய நிகழ்ச்சிகள் வேறலெவல் ஹிட் அடித்தன. சுசித்ராவின் பாப்புலாரிட்டிக்கு அவரின் தனித்துவமான குரலும் ஒரு முக்கியக் காரணம். இப்படி ஒரு அருமையான குரல்வளம் கொண்ட சுசித்ராவுக்கு சினிமாவிலும் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இவரது குரலில் வெளிவந்த குத்துப் பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.

27
RJ Suchitra

RJ Suchitra

ஜே ஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே பாடல் தொடங்கி போக்கிரி படத்தில் இடம்பெறும் டோலு டோலு வரை இவர் பாடிய வெஸ்டர்ன் குத்துப் பாடலுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சினிமாவில் பாடகியாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிய சுசித்ரா, கந்தசாமி படத்தில் ஸ்ரேயா, மங்காத்தா படத்தில் ராய் லட்சுமி போன்ற நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.

சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார் சுசித்ரா. கடந்த 2015-ம் ஆண்டு வரை சுசித்ராவின் வாழ்க்கை எந்த வித சண்டை சச்சரவுகள் இன்றி சென்றுகொண்டிருந்தது. அதன் பின்னர் தான் அவருக்கு ஏழரை ஸ்டார்ட் ஆனது. 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுசித்ரா சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... வனிதா வீட்டை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் பயன்படுத்தினார்... சுசித்ரா சொன்ன பகீர் தகவலால் பதறிய கோலிவுட்

37
SInger Suchitra

SInger Suchitra

சுச்சி லீக்ஸ்

கடந்த 2016-ம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள் கசியவிடப்பட்டன. அதன்படி அனிருத் ஆண்ட்ரியா, தனுஷ் திரிஷா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி போன்ற பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதோடு தனுஷ், அனிருத் ஆகியோர் தனக்கு போதை பொருள் கொடுத்து தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

ட்விட்டர் ஹேக்

சுச்சி லீக்ஸ் பெயரில் பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டதாக கூறினார் சுசித்ரா.

47
Suchitra, karthik kumar

Suchitra, karthik kumar

மனநலம் பாதிப்பு

சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின்னர் சுசித்ராவின் இல்லற வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்பட, சுசித்ராவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் குமார் பேட்டி அளித்திருந்தார்.

விவாகரத்து

சுச்சி லீக்ஸ் விவகாரம் பூதாகரமானதை அடுத்து சுசித்ராவை விட்டு பிரிய முடிவெடுத்த கார்த்திக் குமார், கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

57
suchitra, kamal

suchitra, kamal

காணாமல் போன சுச்சி

சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின் வெளியில் தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா, கடந்த 2019-ம் ஆண்டு காணாமல் போனதாக அவரது சுனிதா போலீஸில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கி இருப்பது தெரியவந்தது.

பிக்பாஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் சுசித்ரா, அந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற சுசித்ரா, சைலண்ட் மோடிலேயே இருந்ததால் ஓரிரு வாரத்திலேயே எலிமினேட் ஆனார்.

கமலை விமர்சித்த சுசித்ரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு கமல்ஹாசன் அனைவருக்கும் தனது சொந்த செலவில் காதி ஆடைகளை பரிசாக வழங்கி அணிந்து வர சொன்னார். ஆனால் அதை விமர்சித்து பேசிய சுசித்ரா, அது சிந்தடிக் ஆடை என்றும் கமல் ஒரு கையாலாகாத மனிதர் என்றும் சரமாரியாக சாடி இருந்தார்.

67

தனுஷை சாடிய சுசித்ரா

தனுஷும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சாடிய சுசித்ரா. இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்துக் கொள்வார்கள் என்றும், இருவரும் ஒரே அறையில் இருந்ததை தானே பார்த்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

பயில்வான் பிட்டு பட ஏஜெண்ட்

பயில்வான் ரங்கநாதன் ஒரு பிட்டு பட ஏஜெண்ட் என்கிற தகவலையும் சுசித்ரா வெளியிட்டு உள்ளார். மலையாள நடிகைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஆபாச பட ஷூட்டிங் நடத்த பயில்வான் உதவியதாக சுசித்ரா பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

77
Trisha, suchitra

Trisha, suchitra

விஜய் வீட்டு பார்ட்டி

நடிகர் விஜய் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடக்கும் என்றும் அதில் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டதாக கூறிய சுசித்ரா, விஜய் வீட்டின் முன் திரிஷா டான்ஸ் ஆடியதாகவும் பேசி இருக்கிறார்.

அஜித் புலம்பல்

நடிகர் அஜித் வீட்டு பார்ட்டியிலும் தான் கலந்துகொண்டதாக கூறிய சுசித்ரா, அப்போது அதில் அதிகளவு மது பரிமாறப்பட்டதாகவும் அந்த சமயத்தில் அஜித் தன்னிடம் வந்து சின்னத்தாமரை பாடலை போல் தனக்கு ஒரு பாட்டு நீ பாடவில்லையே என புலம்பியதாக கூறி இருக்கிறார்.

சுச்சி லீக்ஸ் போட்டோ தந்த திரிஷா 

சுச்சி லீக்ஸில் வெளிவந்த புகைப்படங்களை திரிஷா தான் தன்னிடம் கொடுத்ததாக சுசித்ரா கூறி இருக்கிறார். அவரே கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தன்னைப்பற்றி அவதூறாக பதிவிட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் ஓரினச்சேர்க்கையாளர்

ஷாருக்கான், கரண் ஜோகர் போன்றவர்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கூறியுள்ள சுசித்ரா, அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் லண்டனில் பார்ட்டி பண்ணியதாக கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இந்த பாடல்கள் எல்லாம் சுசித்ரா பாடுனதா? சூப்பர்ஹிட் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved