- Home
- Gallery
- Pumpkin Seeds : பூசணி விதைகள் ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.. விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்க!
Pumpkin Seeds : பூசணி விதைகள் ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.. விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்க!
தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்..

தானியங்கள் மற்றும் விதைகளை சாப்பிடும் போக்கு சமீப காலமாகவே மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக, நமது தினசரி ஊட்டச்சத்துக்களை எளிதில் பெறுவதற்கு கண்டிப்பாக விதைகள் பெரிதும் உதவுகிறது. காலை முதல் இரவு உணவு வரை என இவற்றை பலவிதங்களில் எடுத்து கொள்ளலாம். அவற்றில் ஒன்றுதான் பூசணி விதை.
இதில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம், புரதம் மற்றும் பல. இந்த விதைகள் அவற்றின் பல நன்மைகள் காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த பதிவில் பூசணி விதைகளின் நன்மைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தசைகளை வலுவாக்கும்: பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை உருவாக்கலாம், தசைப்பிடிப்பு, சுருக்கங்கள் மற்றும் வலிகளைத் தடுக்கலாம்.
எடை இழப்புக்கு நல்லது: பூசணி விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது. எனவே, இதை உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், வயிறு நிரம்பி அதிகமாக சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்: பூசணி விதைகளில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட அதிக கொழுப்பு உள்ளது. ஆய்வுகளின்படி, பூசணி விதைகளில் உள்ள கொழுப்பில் பெரும்பாலும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிச்சமாகக் குறைக்கலாம்.
இதையும் படிங்க: வெறும் 2 கிராம் பூசணி விதைகள் சாப்பிட்டால் போதும்..மாரடைப்பின் அபாயம் குறைந்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்..
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: பூசணி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது இரைப்பை மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்க பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் குடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.
இதையும் படிங்க: என்னது பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!
ஆண்களுக்கு நல்லது: ஆண்கள் பூசணி விதைகளை தொடர்ந்து உட்கொண்டால், அவர்கள் கருவுறுதல் மேம்படும். மேலும் இதில் இருக்கும் துத்தநாகம் முன்கூட்டிய விந்துதள்ளல் பிரச்சனைகள், பாலியல் தூண்டுதல் உள்ளிட்ட கருவுறுதல் பிரச்சனைகளை நீக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D