மத்திய பிரதேச மாநிலத்தில்,பள்ளி வாசலில் பெற்றோருக்காக காத்திருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர் 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் 7 வயதான மாணவி  திவ்யா. இவர்  தினமும் பள்ளி முடிந்த உடன் தன் பெற்றோர்கள் வரும் வரை பள்ளி வாசலில் காத்திருந்து வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனை நோட்டமிட்ட  இர்பான் என்ற நபர், திட்டம் போட்டு சிறுமியை கடத்தி சென்று உள்ளார் . 

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததில், அந்த சிறுமிக்கு உடல் முழுக்க  காயம் அடைந்துள்ளது. இர்பான் என்ற காம வெறியன் கொடுத்த கொடூர பாலியல் தொந்தரவால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் சிறுமி  திவ்யா..

தற்போது திவ்யா,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் திவ்யாவை காப்பாற்றுவதற்காக தங்களால் இயன்ற  அனைத்து வழிகளிலும் போராடி வருகின்றனர்.

தன் மகள் மட்டுமே உலகம் என வாழ்ந்து வந்த பெற்றோர்கள் நொடிக்கு நொடிக்கு  வலியால் துடித்து வருகின்றனர்.சிறுமி காப்பாற்றப் பட வேண்டும் என்பதே  அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

காம கொடூரனை போலீசார்  கைது செய்து, அவர்களுக்கே உண்டான பாணியில்  குற்றவாளியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.