ELECTION : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..? முக்கிய வேட்பாளர்கள் யார்.? எத்தனை தொகுதிக்கு தேர்தல்.?
இந்திய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தல்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்திய தேர்தல் ஆகும் சுமார் 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் இரண்டரை மாதங்கள் நடைபெறும் இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிக்கு நடைபெற்றது. இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
15.88 பேர் வாக்களிக்க தகுதி
கேரளா,கர்நாடகம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 88 தொகுதிகளில் மொத்தம் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 1098 ஆண்கள், 102 பேர் பெண் வேட்பாளர்கள்.இன்றைய தேர்தலில் 15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள் யார்.?
இந்த தேர்தலில் முக்கிய தலைவர்கள் களம் காணும் தேர்தலாக உள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் போட்டியிடும் கேரள மாநிலம் ஆலப்புழா, சசிதரூர், மத்திய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர் ஆகியோர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி, ,மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி போட்டி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் தொகுதியில் போட்டி , பெங்களூர் புறநகர், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடும் மண்டியா, நடிகை ஹேமமாலினி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக உள்ளன.
வெப்ப அலையை வெல்வது எப்படி? பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- 19 April Lok Sabha Election
- Live Lok Sabha Election
- Lok Sabha Election Exit Polls
- Lok Sabha Election News
- Tamilnadu Voting Date in Lok Sabha Election
- lok sabha election
- lok sabha election 2024
- lok sabha election 2024 Latest News
- lok sabha election 2024 Live
- lok sabha election 2024 Live Updates
- lok sabha election 2024 Voting Percentage
- lok sabha election 2024 in Tamilnadu