Honey: உடல் எடையைக் குறைக்க தேனை இப்படி பயன்படுத்தி பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்!

தினசரி உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நாட்டு மருத்துவத்தில் மருந்துகளை உட்கொள்ள தேன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Use Honey to Lose Weight This Way: Instant Results!

இயற்கை நமக்கு தந்த அரிய பரிசுகளில் ஒன்று தேன். இதில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. தினசரி உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நாட்டு மருத்துவத்தில் மருந்துகளை உட்கொள்ள தேன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம் நிறைந்த தேன் 

தேனில் நன்மை அளிக்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ன. ஃபுருக்டோஸ் நிறைந்த தேனை சாப்பிட்ட விளையாட்டு வீரர்களின் உடலில் இருக்கும் கொழுப்புகள் எரிக்கப்படுவது மட்டுமின்றி, உடலின் ஸ்டாமினா அதிகரிப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எந்தெந்த வழிகளில் தேனைப் பயன்படுத்தலாம்?

1. தேன் மற்றும் பால்

பால் - 1 கிளாஸ் , தேன் - 1 தேக்கரண்டி

முதலில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைக்க வேண்டும்.  பால் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் சமயத்தில், அதில் தேனைக் கலந்து குடிக்க வேண்டும். இந்தப் பாலை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், பாலில் உள்ள புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்‌. மேலும் இது தொப்பையை குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

2. தேன் மற்றும் எலுமிச்சை

தேன் - 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி, ப்ளாக் சால்ட், தண்ணீர் - 300 மிலி

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சிறிது நேரம் சூடேற்றி இறக்கி விட வேண்டும். பின் அந்நீரை சற்று குளிர வைத்ததும், அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் ப்ளாக் சால்ட் ஆகியவற்றை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

3. பட்டை மற்றும் தேன்

தேன் - 1 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, தண்ணீர் - 1/2 கப்,

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.  நீர் கொதிக்க தொடங்கும் போது, அதில் பட்டையைப் போட்டு இறக்கி, 10 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். பிறகு, இந்நீரை வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை மிக வேகமாக குறையும்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்து முருங்கை கீரை பொடி !

4. சுடுநீரில் தேன்

மிகவும் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், சூடான நீரில் தேன் கலந்து குடிக்கலாம். அதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினந்தோறும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை உணர முடியும்.

5. க்ரீன் டீயில் தேன்

நீங்கள் டீயை விரும்பி குடிப்பவர் என்றால், உடல் எடையை குறைக்க க்ரீன் டீ பெரிதும் உதவுகிறது. அதுவும் நீங்கள் தயாரிக்கும் க்ரீன் டீயில், 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். பல ஆய்வுகளில் க்ரீன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும் என தெரிய வந்துள்ளது. மேலும் இதனுடன் தேன் கலந்து குடிக்கையில், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை மேலும் குறைக்க உதவுகிறது.

குறிப்பு

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றம் தெரியும்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios