கமல் படத்தில் நடிக்க வந்த ஆஃபர்; ஓப்பனாக நோ சொன்ன ஆர்.ஜே.பாலாஜி; என்ன காரணமா இருக்கும்?
RJ Balaji : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதற்கு நோ சொல்லியுள்ளார்.
RJ Balaji
தமிழ் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இப்போது ஹீரோவாகவும், இயக்குனராகவும் கலக்கி, பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் ஆர்.ஜே பாலாஜி. பண்பலை தொகுப்பாளராக தன்னுடைய கலையுலக பயணத்தை தொடங்கிய இவர், அதன் பிறகு திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். பிறகு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த இவருக்கு, மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது "நானும் ரௌடி தான்" என்கின்ற திரைப்படம் தான் என்றால் அது மிகையல்ல. பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் நண்பராக அந்த படத்தில் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.
நடிகை கஸ்தூரியின் கணவர் யார்? என்ன செய்கிறார், மகன், மகள்கள் பற்றி தெரியுமா?
Naanum Rowdy Than
கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய கலை பயணத்தை ஆர்.ஜி பாலாஜி தொடங்கினார். தொடர்ச்சியாக "வல்லினம்", "வாயை மூடி பேசவும்", "வடகறி", "இது என்ன மாயம்" மற்றும் "எட்சன்" போன்ற திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாலும், "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது. தொடர்ச்சியாக தமிழ் மொழியில் நல்ல பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 2019ம் ஆண்டு வெளியான "எல்கேஜி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்தும் வந்தார்.
Indian 2
இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடிக்க தனக்கு ஆஃபர் வந்ததாகவும், ஆனால் அதில் நடிக்க தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். காரணம் அப்போது தான் சொர்க்கவாசல் திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. ஒரு தயாரிப்பாளர் என்னை நம்பி பெரும் பொருளை முதலீடு செய்து திரைப்படம் எடுத்து வருகிறார். அப்பொழுது நான் வேறு ஒரு படத்தில் சிறு கதாபாத்திரம் நடிப்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. ஆகவே ஒரு சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பது மேல் என்று கருதி அந்த திரைப்படத்தின் வாய்ப்பை நான் தட்டிக் கழித்தேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை கரீனா கபூரை கடுமையாக விமர்சித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி; ஏன்?