ஆரோக்கியத்திற்கு அருமருந்து முருங்கை கீரை பொடி !

வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை வைத்து சத்தான இட்லி பொடி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

How to make Drumstick Leaves Powder in Tamil

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவுக்கு இட்லி, தோசை வகைகளை தான் அதிகமாக சாப்பிடுவார்கள்.அதற்கு தினமும் மாதிரியான சட்னி, சாம்பார் என்பது என்று சாப்பிட்டு சலிப்பை தரும். ஒரு சிலர் இட்லி பொடியை வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், சாதாரண இட்லி பொடியை விட கொஞ்சம் ஸ்பெஷலா,சத்தாக, சுவையாக ஒரு இட்லிப் பொடியை தான் பார்க்க உள்ளோம். முருங்கை கீரையில் அதிகமான இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க்,பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘ஏ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ், போன்ற எண்ணில் அடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன.

மேலும் முருங்கைக் கீரை மலட்டுத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. அது தவிர மலச்சிக்கலை தீர்க்கவும் துணை புரிகிறது. அதோடு மட்டுமல்லாமல், ரத்த வெள்ளை அணுக்களின் எண்னிக்கையை அதிகரித்து ரத்த சோகையை வராமல் தடுக்கிறது. பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இன்னும் பல மருத்துவ பயன்களை வாரி வழங்கும் முருங்கை கீரை வைத்து சத்தான பொடியை செய்யலாமா!

வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை வைத்து சத்தான முருங்கை இட்லி பொடி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக் கீரை – 2 கப்
  • கடலைப் பருப்பு – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • மிளகு – 5 ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • பெருங்காயம் –2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

நாவை சுண்டி இழுக்கும் பாறை மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் முருங்கைக் கீரையை 2 அல்லது 3 முறை நன்றாக அலசி அதில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு ஒரு காட்டன் துணியில் போட்டு, நிழலில் வைத்து 3 நாட்கள் வரை உலர்த்த வேண்டும். 3 தினங்களுக்கு பின்னர் சற்று முறுகளான நிலையில் இருக்கும் முருங்கைக் கீரை மாறி இருக்கும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சூடேறிய பின்(எண்ணெய் சேர்க்காமல்) உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொண்டு தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் கடலைப் பருப்பை சேர்த்து அதையும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து அதை உளுந்தம் பருப்பு வைத்துள்ள தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை தனி தனியாக சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து பின் அதில் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து அவைகளையும் தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு,மிக்ஸி ஜாரில் போட்டு, அதில் உப்பு மற்றும் உலர்த்தி வைத்துள்ள முருங்கைக் கீரை ஆகியவற்றை சேர்த்து இட்லி பொடி பக்குவத்திற்கு அரைத்து எடுத்தால் சத்தான முருங்கை கீரை இட்லி பொடி ரெடி!

(இந்த பொடியின் சூடு ஆறிய பிறகு ஒரு ஏர் டைட் டப்பாவில் எடுத்துகே வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். இதனை சூடான சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios