MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குளிர்காலத்தில் வெந்நீர் இதமா இருக்கும்.. ஆனா ரொம்ப டேஞ்சர்!! யார் குடிக்கக் கூடாது தெரியுமா?

குளிர்காலத்தில் வெந்நீர் இதமா இருக்கும்.. ஆனா ரொம்ப டேஞ்சர்!! யார் குடிக்கக் கூடாது தெரியுமா?

Drinking Hot Water Effects : சில பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் வெந்நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 19 2024, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

வெந்நீர் குடிப்பது உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் புரியும். அதிலும் குளிர்காலங்களிலும், மழை காலங்களிலும் வெதுவெதுப்பான நீரை அருந்துவது இதமாகவும், குளிருக்கு ஆறுதலாகவும் இருக்கும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போதும் பூமியில் ஈரப்பதம் இருந்துவருகிறது. இதன் காரணமாக ஜில்லென்ற காற்று வீசுகிறது. இந்த மாதிரி நேரங்களில் வெதுவெதுப்பான நீர் உடலுக்கு இதம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

தண்ணீரை வெதுவெதுப்பாக குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது. நமது உடலில் உள்ள நச்சுகளை வெந்நீர் அகற்றும். சாதாரண நீருடன் ஒப்பிட்டால் வெந்நீரை அருந்துவது செரிமானத்தை துரிதமாக்கும். பொதுவாக நிபுணர்கள்  வெதுவெதுப்பான நீரை அருந்துவது வளர்சிதையும் தூண்டுவதாக கூறுகின்றனர்.  உடல் எடையைக் குறைப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. 

இதையும் படிங்க:  தேனும் வெந்நீரும் நல்லது தான்... ஆனா 'இவங்க' மட்டும் குடிக்கவே கூடாது!!

36
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  மலச்சிக்கல் பிரச்சனை இருப்போர் இதை செய்யலாம். ஆயினும் எல்லோருக்கும் வெதுவெதுப்பான நீர் நல்ல பலன்களை தருவதில்லை. வெந்நீர் சில சமயங்களில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். யாரெல்லாம் வெந்நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இங்கு காணலாம். 

இதையும் படிங்க: வெறும் வெந்நீர்தானேனு நினைக்காதீங்க; 5 நோய்களை நீக்கும் அருமருந்தாம் அது!

46
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

வாய் புண்கள்: 
 
வாய் புண் இருக்கும் நபர்கள் வெந்நீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்களுடைய புண்களின் மீது பாதிப்பை உண்டாக்கும்.  இதனால் வலியும் அதிகமாகலாம். வாயில் உள்ள புண்கள் சீக்கிரம் ஆறாமல் போய்விடும்.  இது மாதிரியான சமயங்களில் சாதாரண தண்ணீர் அருந்தலாம். 

நீர்ச்சத்து குறைபாடு: 

உங்களுக்கு நீர்ச்சத்து (Dehydration) குறைபாடு இருந்தால்  வெந்நீர் குடிக்க வேண்டாம். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும். உடலில் காணப்படும் தாதுக்கள் கூட நீங்கலாம். இதனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு முன்பே நீரிழப்பு பிரச்சனை இருந்தால் வெந்நீர் குடிப்பதை தவிருங்கள்.  சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். 

56
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

அமிலத்தன்மை கோளாறு: 

அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரை குடிக்க வேண்டாம். இதனால் வயிற்றில் இருக்கும் அமில அளவை அதிகமாகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீர் குடிப்பதால் வயிறு எரிதல், புளித்த ஏப்பம், வாயு கோளாறுகள் வரலாம்.   

வயிற்றுப் புண்: 

வெந்நீர் குடிப்பது வயிற்று புண்களை மோசமாக்கும். இதனால் வலியும் ஏற்படலாம். அல்சர் மாதிரியான பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரை தவிர்ப்பது நலம்.  சாதாரண நீரை அருந்துவதால் வயிற்றுக்கு குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும். 

66
Drinking Hot Water Effects In Tamil

Drinking Hot Water Effects In Tamil

காய்ச்சல்: 

தீவிர காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வெந்நீரை ஆறவைத்து அருந்தலாம். சூடாக குடிப்பது நல்லதல்ல. தீவிர காய்ச்சலில் ஏற்கனவே உடல் வெப்பமாக இருக்கும் என்பதால் ஆறிய வெந்நீரை அருந்தலாம். 

வெந்நீர் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கும். ஆனால் வெந்நீரை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்நீர் அதிகமாக அருந்தினால் தொண்டை, செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகள் வரலாம். தொடர்ந்து வெறும் வயிற்றில் வெந்நீர் எடுத்து கொள்பவர்கள் மருத்துவ பரிந்துரையை நாடுவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved