இந்த பபிள் டீயை குடித்துப்பாருங்க... அப்புறமா அற்புதம் நடக்கும் நம்புங்க..!!
தேநீரில் பல வகைகளுக்கு. பிளாக் டீ, பால் டீ, மசாலா டீ, இஞ்சி டீ மற்றும் பல. பபிள் டீ பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த டீ மற்ற தேநீர் போல இல்லை. இந்த ஸ்பெஷல் டீயைக் குடித்தால் மூளை கூர்மையாகி உடலுக்கு ஆற்றல் கிடைக்குமாம்.
கடந்த 1980-களில் தைவானில் கண்டுப்பிடிக்கப்பட்டது தான் இந்த பபிள் டீ. அதையடுத்து உலகளவில் இது மிகவும் பிரபலமானது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கு, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான பானமாக மாறியுள்ளது. குறிப்பாக இளையதலைமுறையினர் பபிள் டீ குடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பபிள் டீ, போபா டீ, பியர்ல் (முத்து) டீ அல்லது மரவள்ளிக்கிழங்கு டீ என பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கை மசித்து ஒரு குமிழி வடிவத்தில் உருட்டிக்கொள்ள வேண்டும். அதை நீ சமைக்கும் தேநீரில் போட்டு சாப்பிட்டால், அதுதான் பபிள் டீ. நன்றாக டீயில் ஊறிய அந்த உருண்டைகளை சாப்பிடும் போது, மிகவும் சுவையாக இருக்கும். இந்த தேநீரில் சக்கரை அளவுக்கு அதிகமாக உள்ளது. எனினும் பபிள் உருண்டைகள் மற்றும் தேநீரை சரியான விகிதத்தில் கலக்கினால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். பபிள் டீயில் உள்ள டோபியோகா துகள்கள் இந்த தேநீரை ஆரோக்கியமாக்குகின்றன. பபிள் டீ குடிப்பது எப்படி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று விரிவாக பார்க்கலாம்.
உடலுக்கு உற்சாகம் தரும் பபிள் டீ
பால் சார்ந்த பபிள் டீ உடலுக்கு பாலின் சத்துக்களை வழங்குகிறது. பாலி ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பண்புகள் உள்ளன. இது உடலுக்கு மிகுந்த ஆற்றலை தருகிறது. மேலும் பாலில் அதிகளவில் கால்ஷியம் உள்ளது. அதனால் எலும்புகள் வலுபெறுகிறது. எனவே வேறு எந்த சத்துக்களையும் உட்கொள்ளாமல் பபிள் டீயை அருந்தி ஆரோக்கியமாக இருக்கலாம்.
மூளையின் செயல்பாட்டைத் தூண்டும்
ஒரு கிளாஸ் பால் நமது உடல் அமைப்புகளை சரியாக செயல்படுவதற்கான சக்தியை தருகிறது. மரவள்ளிக்கிழங்கு பந்துகளில் கிடைக்கும் கார்போஹைட்ரேட் மூளைக்கான ஆற்றலின் முதன்மை ஆதாரமாகும். இது இருதய தசைகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு எரிபொருளாகவும் செயல்படுகிறது.
நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது
பபிள் டீயின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகும். . பானத்தில் பச்சை தேயிலை அடிப்படை உள்ளது. இது உடலுக்கு பரந்த அளவிலான ஆண்டிஆக்சிடண்டுக்களை வழங்குகிறது. இதன்முலம் எந்தவொரு ஆண்டிஆக்சிடண்டுகள் அழுத்தமும் உடலில் குவிவதை இது தடுக்க உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு இலை போதும்..!!
நோய் வராமல் பாதுகாக்குகிறது
க்ரீன் டீ சேர்ப்பது பபிள் டீயை வளப்படுத்துகிறது. நமது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் புற்றுநோய் மற்றும் பல்வேறு நாட்பட்ட நோய்களை உண்டாக்கும். ஆனால் க்ரீன் டீயில் எபிகல்லோகேடசின் மற்றும் பாலிபினால்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, உங்கள் வழக்கமாக குடிகும் பபிள் டீயுடன் க்ரீன் டீ சேர்த்துக் கொள்வது நல்லது.