ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு இலை போதும்..!!
அதிக மூலிகை நலனை கொண்ட கற்பூரவல்லி இலைகள் மூலம் வறட்டு இருமல், எலும்பு தேய்மானம், புற்றுநோய் பாதிப்பு, சிறுநீரகத்தில் சேரும் கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குகின்றன.
உலகளவில் வெப்பமண்டல காடுகளை கொண்ட நாடுகளில், இந்தியாவில் தான் அதிகளவு மூலிகைச் செடிகள் வளருகின்றன. அதுவும் எந்தவித பராமரிப்பும் தேவைப்படாமல், குப்பை மேடு மற்றும் வனாந்தரப் பகுதிகளில் வளரக்கூடிய மூலிகைச் செடிகள் நம்மிடம் அதிகம் உள்ளன. அப்படிப்பட்ட மூலிகைப் பயன்களை கொண்டு செடிகளில் ஒன்றுதான் கற்பூரவல்லி. இதை ஒருசிலப் பகுதிகளில் ஓமவல்லிச் செடி என்றும் கூறுகின்றனர். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு தொன்றுத் தொட்டு கற்பூரவல்லி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது விஷக் கிருமிகளை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையி கற்பூரவல்லி குறித்து பலரும் அறிந்திடாத அரிய தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீர்ச்சத்து மிகுந்த கற்பூரவல்லி
கற்பூரவல்லி இலைகளில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதிலுள்ள காரத்தன்மை பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. இதை வெறும் வாயில் அப்படியே எடுத்தும் சாப்பிடலாம். கற்பூரவல்லி இலைகளை நுகர்ந்துப் பார்த்தால் ஓமத்தின் மனம் இருக்கும். சளி, காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை தரக்கூடிய வல்லமை கற்பூரவல்லி இலைகளுக்கு உண்டு. அதேசமயத்தில் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தலாம். கற்பூரவல்லி இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாற்றை சூடாக்கி மூக்கில் நுகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை வழங்கும்.
வறட்டு இருமலை விரட்டிவிடும்
ஒருசிலருக்கு வறட்டு இருமல் ஏற்பட்டால், தொண்டை கட்டிவிடும். இந்த பிரச்னைக்கு பலரும் இருமல் டானிக் குடித்து வருவார்கள். ஒருசில நாட்களுக்கு பிறகு தான் இந்த பிரச்னை குணமடையும். ஆனால் கற்பூரவல்லி இலைகளை வெறும் வாயில் மென்று தின்றாலோ அல்ல்து அதிலிருந்து சாற்றைப் பிழிந்து எடுத்து அருந்தினாலோ உடனடியாக தொண்டைக் கட்டு நீங்கிவிடும். இந்த செயல்முறையை குறைந்தது 3 முதல் 4 நாட்கள் வரை தொடர்ந்தால், தொண்டைக் கட்டு முற்றிலுமாக நீங்கிவிடும்.
தோல் பிரச்னைக்கு தீர்வை வழங்கும்
நுண்கிருமிகள் தொற்றால் தோல் எளிதாக பாதிக்கப்பட்டுவிடும். இதனால் படை, அரிப்பு, சொரி, சிரங்கு போன்ற நோய்கள் வரக்கூடும். இந்த பிரச்னைக்கு கற்பூர்வல்லி இலைகள் நல்ல தீர்வை வழங்குகின்றன. அந்த இலைகளை சுட்டு, அதை பாதிக்கப்பட்ட தோல் பகுதி மீது வைக்க வேண்டும் அல்லது கற்பூர்வல்லி இலைகளை கசக்கி சாறு எடுத்து, ஒரு துளி கற்பூரம் சேர்த்து தடுவுவதும் சிறந்த தீர்வை வழங்கும். குறைந்தது தோல் பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வரை தடவி வருவது, பாதிப்பில் இருந்து நிரந்தர தீர்வை வழங்கும்.
நெயில் பாலிஷ் இருந்தா போதும் மருவை விரட்டி விடலாம்..!!
எலும்பு ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும்
மூட்டுப் பகுதிகளில் திடீரென வலி ஏற்பட்டாலும் அல்லது வீக்கம் கொடுத்தாலும் கற்பூரவல்லி தீர்வை வழங்குகின்றன. அதற்கு கற்பூரவல்லி இலைகளுடன் கல்லுப்பு சேர்த்து, அதை தோசை கல்லில் சுட்டு எடுத்து ஒத்தடம் வைத்து வரலாம். இதன்மூலம் விரைவில் பாதிப்பு குணமடைகிறது. மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் ஆஸ்டியோபோரோசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த பாதிப்பையும் கற்பூரவல்லி இலைகளால் சரிசெய்ய முடியும். அதில் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. இது எலும்பு மற்றும் மூட்டுகளின் நலனை மேம்படுத்தக்கூடியவை. அதனால் கற்பூரவல்லி இலைகளால் செய்த தைலத்தை எலும்பு மற்றும் மூட்டு தேய்மானத்தில் , தேய்த்து வருவது பிரச்னைக்கு நிவாரணம் வழங்கும்.
மஞ்சள் கலந்த பால் அருந்துவதால் உடலில் ஏற்படும் அற்புதம்..!!
புற்றுநோயை விரட்டு, படபடப்பை நீக்கும்
உலகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து காணப்படுகிறது. கற்பூர்வல்லி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா 6 வேதிப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. அதனால் இந்த இலைகளை அடிக்கடி நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அதேபோல கற்பூரவல்லி இலைகளை அடிக்கடி நுகர்ந்துப் பார்த்தால், அதிலுள்ள ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுகிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் படபடப்பு உள்ளிட்டவை நீங்கும். அதேபோன்று கற்பூரவல்லி இலைகளை சாப்பிடுவதும் மற்றும் அதனுடைய சாற்றை குடிப்பதும் சிறுநீரகத்தில் சேரும் உப்பை கரைக்கும்.