மெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்கள்- அதற்கு தயாராவதற்கான வழிமுறைகள்..!!
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் முக்கிய மாற்றமாகும். எனவே மாதவிடாய் நிறுத்தத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக 45 வயது முதல் 55 வயதான பெண்களிடையே மெனோபாஸ் ஏற்படுகிறது. மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்பு பல்வேறு அறிகுறிகள் தென்படும். அதாவது திடீரென வியர்த்துக் கொட்டுதல், இரவில் அதிகமாக வியர்ப்பது, நிம்மதியாக உறங்குவதில் சிக்கல், உடலுறவில் நாட்டமின்மை, பெண்ணுறுப்பு வறண்டு போவது, திடீரென அதிகரிக்கும் உடல்நிலை, கை கால் வேதனை போன்ற அறிகுறிகள் தோன்றும் போது பெண்கள் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான மெனோபாஸ் நடைமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. அதனால் மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் உங்களுக்கு ஏதேனும் தென்படும் பட்சத்தில் நீங்கள் மெனோபாஸ் குறைத்து அறிந்துகொள்வது நல்லது.
எடை கூடுவதற்கான வாய்ப்பு
மெனோபாஸ் ஏற்படும் போது வளர்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் ஆர்த்தரைடீஸ் மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு நோய் பாதிப்புகள் வரக்கூடும். இதைத் தவிர்க்க முடிந்தவரையில், பெண்கள் உடலுக்கு ஏற்றவாறான எடையை பராமரித்து வர வேண்டும். நல்ல உணவு பழக்கங்களை பின்பற்றி வருவது நன்மையை தரும். உடலை இயக்கத்துடன் வைத்துக்கொள்வது, நடைபயிற்சி செய்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சரியான நேரத்தில் தூங்கி எழுவது, நொறுக்குத்தீனி வகைகளை தவிர்ப்பது மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவை உடல் எடையை சரியான விகிதத்தில் பராமரிக்க உதவும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
எப்போதும் உடலை இயக்கத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த ஏதேனும் உடற்பயிற்சியை அன்றாடம் செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இடுப்புத் தசைகள், கை தசைகள் போன்றவற்றுக்கு உடற்பயிற்சி செய்வது மெனோபாஸ் நேரத்தில் உறுதுணையாக இருக்கும். எலும்பு மற்றும் தசை வலிமையை பராமரிக்க எடை தாங்கும் உடற்பயிற்சி எலும்பு முறிவுகள் ஏற்படாமல் தடுக்கின்றன.
அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!
பத்திய உணவுப் பழக்கம்
உணவில் கவனமாக இருப்பது நல்லது. கொழுப்பு மற்றும் எளிய கார்போஹைட்ரேட் குறைந்த ஆரோக்கியமான உணவு, நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருப்பது அவசியம். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏனெனில் இது இதய நோய் அபாயங்களைக் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேர் ஸ்ட்ரெயிட்னர் பயன்படுத்துபவருக்கு வரும் உயிர்கொல்லி நோய்- ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி..!!
கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம்
மெனோபாஸ் நெருங்கும் காலகட்டத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உட்கொள்வது மிகவும் முக்கியம். தியானம், ஒரு புதிய மொழியைக் கற்றல் அல்லது ஏதேனும் ஆக்கப்பூர்வமான செயல்பாடு ஆகியவை நினைவாற்றல் குறைவதையும் மனநிலை மாறுபாடுகளையும் தடுக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கிறது. டிவி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக இரவுகளில், மத்தியானத்திற்குப் பிறகு காஃபின் மற்றும் இரவில் மது அருந்துவதைத் தவிர்திடுங்கள், உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதையும் விட்டுவிடுங்கள்.
மெனோபாஸை எதிர்கொள்ளும் பெண்ணின் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகள் அவர் அனுபவிக்கும் இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இதனால் குடும்பத்தினரின் அனுதாபம் அதிகரித்து, அப்பெண்ணுக்கான உதவிகள் அதிகரிக்கும். இந்த மாறுதல் காலத்தில் ஆரோக்கியமாக இருப்பவர், மெனோபாஸ் வரும்போது உடல்நல மாற்றங்கள் மற்றும் நோய்களை எதிர்த்து வலிமையாக போராடலாம். அந்த கட்டத்தை கடந்து வரும்போது, அவர்களுக்கு மேலும் மன உறுதி கூடும்.