இந்த வாரம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
தஞ்சாவூரில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஒருதலைக் காதலால் மதன் என்ற நபர் இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார். முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்முன்னே
ரமணி கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளி மதன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (26) இன்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இதனிடையே மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.