அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!
உடலில் இருக்கக்கூடிய யூரிக் அமிலத்தின் அளவு குறிப்பிட்ட அளவை மீறும் போது, அதனால் கால்கள் மற்றும் பாதங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னையை மருத்துவர் ஆலோசனைகளுடனும் உணவு கட்டுப்பாட்டுகளுடன் எளிதாக கையாளலாம்.
நமது உடலில் இருந்து உருவாகும் ஒரு நச்சான திரவம் தான் யூரிக் அமிலம். சிறுநீரகங்களில் இருந்து உருவாகும் இந்த அமிலம், சிறுநீரில் இருந்து வெளியேறிவிடுகிறது. அந்த செயல்பாடு உடல்நலக் கோளாறு காரணமாக நிறுத்தப்படும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் இருப்பு அதிகமாகி, அதனால் உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றனர். உடலில் யூரிக் அமிலத்தில் இருப்பு அதிகரிப்பை ஹைப்பர்யூரிசிமியா என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூட்டுகளில் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பாதங்களில் வீக்கம் போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்து உருவாகும். உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்னென்ன, அதை தொடர்ந்து பாதிப்புகள் என்ன, இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்
யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்கள்
நமது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையாக இருப்பது உடல் பருமன் தான். முறையற்ற உணவுப் பழக்கம், தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, அவரவருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற காரணங்கள் முதன்மையானதாக உள்ளன. இதையடுத்து நாள்பட்ட நீரிழிவுப் பிரச்னை, சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது மற்றும் அதற்காக மருந்துகளை உட்கொள்வது, அதிகளவு ஆல்கஹால் உட்கொள்வது போன்றவை உடலில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறாமல், நிலைகொள்வதற்கு காரணங்களாக உள்ளன.
யூரிக் அமிலம் பாதிப்பால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்
எப்போதும் உடலில் யூரிக் அமிஅம் 6.8 மி.கி/டி.எல் என்கிற அளவில் தன இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டி சென்றால் தான் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. உடலில் யூரிக் அமிலத்தில் படிகங்கள் அதிகரிக்கும் போது, அது மூட்டுகளில் குவிந்து கீல்வாதத்தை ஏற்படுத்தும். இதையடுத்து கால்களில் விறைப்புத் தன்மை அதிகமாகி அமர்வதும் எழுவதும் உட்காருவதும் போன்ற செயல்பாடுகள் கடினமாகிவிடும். அவரவர் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்திக்கு ஏற்ப பாதிப்புகள் இருக்கும். ஒருசிலருக்கு நடப்பதே பிரச்னையாகிவிடும். குளிர்ந்த காலநிலையில் மூட்டுக்குள், கணுக்கால், பாதங்களில் வலி அதிகமாக இருக்கும்.
செக்ஸ் வாழ்க்கை குறித்து நண்பர்களிடம் பேச தயங்கக்கூடாது- காரணம் இதுதான்..!!
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை
முடிந்தவரையில் புரதம் குறைந்த அளவு கொண்ட உணவுகளை உண்ணுவது மிகவும் முக்கியம். சிவப்பு இறைச்சி, பன்றி இறைச்சி, பால் பொருட்கள், மத்தி மீன்களை சாப்பிடுவதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. அதேபோல யூரிக் அமில அளவு அதிகமாக கொண்டவர்கள் ஆல்கஹால், பீர் போன்ற மதுபானங்களை அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நீங்கள் உடல் பருமன் பிரச்னையை எதிர்கொண்டு வந்தால், முதல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எடை அதிகரிப்பதால் நீரிழிவுப் பிரச்னை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிகரிப்பதோடு, அதனால் உடலில் யூரிக் அமில இருப்பையும் அதிகரிக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பட்டாசு வாங்கும் போது இதெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!!!
யூரிக் அமிலம் சேராமல் இருக்க செய்ய வேண்டியவை
நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால், முதலில் அதை குறைக்க முயற்சி எடுங்கள். அதை தொடர்ந்து மதுபானம், சக்கரை உணவுகளை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். உணவில் காபி சேர்த்துக் கொண்டால் கீல்வாதம் பிரச்னை வராது. அதிகளவு வைட்டமின் சி கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். இது உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை வாரி வழங்கும். அதெபோல பல்வேறு பழங்களை விடவும், உடலில் யூரிக் அமிலம் வெளியேற்றத்தை சீராக்குவதற்கு செர்ரி பழங்கள் நல்ல தேர்வாக அமையும். யூரிக் அமில இருப்பு கட்டுப்பாட்டுக்கு வரும் வரை இறைச்சி உணவுகள், கடல் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருங்கள். முடிந்தவரை தினமும் நன்றாக தண்ணீர் குடியுங்கள்.