Egg: முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்: எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
மறந்தும் கூட முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. இதனால் முட்டையின் சுவை கெட்டுப்போவது மட்டுமின்றி, அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம். அந்த அளவிற்கு, குளிர்சாதனப் பெட்டிகள் பிரசித்தி பெற்றுள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கின்றனர். முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர். இதன் காரணமாக முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என நம்புகின்றனர். இருப்பினும், மறந்தும் கூட முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. இதனால் முட்டையின் சுவை கெட்டுப்போவது மட்டுமின்றி, அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
தினந்தோறும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் புரதம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் பராமரிக்கப்படும் முட்டைகளை விடவும், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் முட்டைகள் மிக விரைவாக கெட்டுப்போய் விடும். மேலும், பாலைப்போல் திரிந்து விடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அறைவெப்ப நிலை
முட்டையை குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பிறகு, அதனைப் பயன்படுத்தும் நேரத்தில் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வருவோம். அப்போது வெப்ப நிலை வேறுபாட்டினால், முட்டையின் ஓட்டில் இருக்கும் சிறுதுளைகளின் வழியே பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து, முட்டையின் உள்ளே சென்று விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே முட்டையை வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். இல்லையெனில் அறை வெப்ப நிலையிலேயே முட்டையை பராமரிக்க வேண்டும் என கூறுகின்றனர். குளிர்சாதனப் பெட்டியில் முட்டைகளை வைப்பதன் காரணமாக, முட்டைகளின் இயற்கையான சுவையும் மாறி விடும்.
Betel leaves: தினமும் 2 வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
சத்துக்கள் அழிந்து விடும்
சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காக முட்டையை சாப்பிடும் நாம், அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரித்தால், முட்டையில் இருக்கும் சத்துக்கள் அழிந்து விடும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால், முட்டையை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால், அதன் ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது. அதோடு, ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு தான் உண்டாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.