சளி, கபம் இனிமேல் உங்களை அண்டாது- நுரையீரலை சுத்தம் செய்யும் 5 பானங்கள்..!!

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது முழு உடலையும் பாதுகாக்க உதவுகிறது. 

5 types of Herbal Drinks for Cleansing lungs

குளிர்காலத்தில், குளிர்ந்த காலநிலையின் போது மூச்சுக்குழாய் சுவர்கள் தடிமனாக இருந்துவிட்டால், அது ஆஸ்துமா உட்பட சுவாச பிரச்சனைகளை மோசமாக்கிவிடும். இதனால் நுரையீரலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடுகள், தூசி மற்றும் சளி உள்ளிட்ட காரணங்களால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனால் சைனஸ், வீசிங், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் உருவாகின்றன. குறிப்பிட்ட செயல்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் இதை வராமல் தடுக்க முடியும். சில ஆரோக்கியமான பானங்களை அருந்துவதன் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். அதுதொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ளலாம். 

தேன்

தேன் நுரையீரலை சுத்தம் செய்து வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் நுரையீறலில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இதன்மூலம் நுரையீறலில்  இன்பிளமேஷன் பிரச்னையைக் கூட ஏற்படாமல் பாதுகாக்கும். 

5 types of Herbal Drinks for Cleansing lungs

கிரீன் தேநீர்

கிரீன் டீயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், பலரும் எடை இழப்புக்கு இதை தொடர்ந்து அருந்தி வருகின்றனர். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமாக இருப்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடனடியாக கிடைக்கின்றன. இதனால் நுரையீறலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும், நுரையீறல் தொற்றுக்களை நீக்கும். ஒரு நாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...

மஞ்சள் தேநீர்

இந்தியாவில் மஞ்சள் கிருமிநாசினியாக திகழ்கிறது. இதிலிருக்கும் முக்கிய மூலப்பொருளான குர்குமின் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை தடுக்கிறது. மஞ்சளை தினசரி உணவில் சேர்த்துகொள்வதால் சளி, இருமல் அல்லது காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

அதிமதுரம் தேநீர்

இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்திலும் அதிமதுரம் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை போக்க சிறந்த மருந்தாகும். இதில் டீ போட்டு குடிப்பதன் மூலம் இருதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை  குறைக்க உதவும். இது நுரையீரலில் இருந்து நச்சுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவும். 

5 types of Herbal Drinks for Cleansing lungs

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். இந்த பண்புகள் நுரையீரலை சுத்தப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இலவங்கப்பட்டை நுரையீரலில் ஏற்படும் தொற்று மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவுகிறது. மேலும்  இந்த இலவங்கப்பட்டை டீ நுரையீறல் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீங்கள் ஃபேஷியல் செய்ய சரியான வயது இதுதான்..!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios