Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...
Pongal wishes 2023: போகி மற்றும் பொங்கல் பண்டிகை அன்று பகிர்ந்து கொள்ளும் வாழ்த்துகளை இங்கு காணலாம்.
தமிழர்கள் வருடம்தோறும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாள்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். அன்பும், ஆசியும் பகிர்வதுதானே மனிதனின் தனித்துவம். அப்படியான பகிர்தலுக்கு சில வாழ்த்துகள் இதோ...
போகி பண்டிகை வாழ்த்துகள்!
- பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகையில் உங்களை துன்புறுத்தும் பழைய எண்ணங்களை கைவிட்டு புதிய சிந்தனைகளை வளர்க்க மனமார்ந்த வாழ்த்துகள்.
- போட்டி, பொறாமை போன்ற தீயகுணங்களை விட்டொழித்து அன்பும், பாசமும் கொண்டு நிம்மதியாக வாழ இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.
- தீய எண்ணங்கள் ஒழிந்து நல்லெண்ணங்கள் பெருக போகி திருநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க; Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?
- வீட்டு குப்பைகளை மட்டுமல்ல, மனக்குப்பைகளையும் தீயிலிட்டு மகிழ்வாய் வாழ போகி திருநாள் நல்வாழ்த்துகள்.
- உள்ளம் மகிழ்ந்து இல்லம் எங்கும் மங்களம் பரவும் போகி திருநாள் வாழ்த்துகள்.
பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்!
- பொங்கலை போல உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
- தித்திக்கும் கரும்பாய் வாழ்நாள் எல்லாம் இன்பமாய் இனிக்க பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
இதையும் படிங்க; Makar Sankranti 2023: மகர சங்கராந்தி அன்று ஏன் மராத்தி மொழி பேசுபவர்கள் கருப்பு நிற ஆடை அணிகிறார்கள்?
- தைத்திருநாள் உங்கள் வாழ்வில் தீமைகள் விலக்கி நன்மைகள் பெருக வைக்கும். எனது அன்பான வாழ்த்துகள்.
- சூரிய பகவானை வணங்கும் பொங்கல் விழாவில் உங்கள் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் பரவ இனிய வாழ்த்துகள்.
- பொங்கலில் எல்லோர் மனங்களும் மகிழ்வில் நிறைய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
பிரியமானவர்களுக்கு அனுப்பும் பொங்கல் வாழ்த்துகள்!
- "இனிமையான பொங்கல் போலவே, இனிமையான நாள்களை இணைந்து உருவாக்கி வரும் நாள்களில் அன்பில் திளைத்திருப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள்"
- "பழைய சண்டைகளும், கோவங்களும் வேண்டாம். நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை இனி நடக்காமல் பார்த்து கொள்ளலாம். வா! ஒன்றாக பயணிப்போம். போகி பண்டிகை வாழ்த்துகள்"
- "துன்பங்கள் தரும் கடந்தகாலம் மறந்து நிகழ்காலத்தை அனுபவிப்போம். இனிய போகி திருநாள் வாழ்த்துகள்".
உங்களின் பிரியமானவர்களுக்கு இந்த பொங்கல் மற்றும் போகி பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழுங்கள்.
இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்