- Home
- உடல்நலம்
- வாக்கிங் போறப்ப முழங்கால்களில் 'க்ரீச்' சத்தம் கேக்குதா? அப்ப இதுதான் காரணம்!! உடனே பாருங்க
வாக்கிங் போறப்ப முழங்கால்களில் 'க்ரீச்' சத்தம் கேக்குதா? அப்ப இதுதான் காரணம்!! உடனே பாருங்க
நடக்கும்போது முழங்கால்களில் சத்தம் வருவது, வீங்குவது ஏன் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Why Knee Crackle Often While Walking?
நம்முடைய முழங்கால்கள் தொடை எலும்பை தாடை எலும்புடன் இணைக்கின்ற உடலில் முக்கியமான பகுதியாகும். நாம் நடக்க, நிற்க, உடலில் சமநிலையை பராமரிக்க முழங்கால்கள்தான் உதவுகின்றன. முழங்கால்களில் மெனிஸ்கஸ், தசைநார்கள் போன்றவை காணப்படுகின்றன. இவைதான் முழங்கால் மூட்டை நன்றாக இயங்க வைக்க உதவுகின்றன. நீங்கள் உட்காரும்போது அல்லது நடக்கும் போது முழங்கால்களில் கடக் மொடக் என சத்தம் வருவதை கேட்டிருக்கிறீர்களா? சிலருக்கு இந்த கிரீச் சத்தம், முழங்கால்களில் விரிசல் நடக்கும்போது ஏற்படும். இந்த மாதிரி சத்தம் கேட்பது இயல்பானதா? எப்போது கவனம் தேவை என இங்கு காணலாம்.
Walking - முழங்கால்களில் சத்தம்:
முழங்கால் என்பது வெறும் மூட்டு அல்ல. எலும்புகள், தசைநார்கள், தசைநாண்கள் குருத்தெலும்புகள் ஆகியவற்றால் ஆன சிக்கலான மூட்டு. இவை நாம் நடக்கும்போது ஒன்றிணைந்து செயல்படும். இவற்றில் சமநிலையான இயக்கம் இல்லாவிட்டால் சத்தம் வரலாம். ஏனென்றால் முழங்கால் மூட்டில் காற்றுக் குமிழ்கள் உருவாகியிருக்கும். சில நேரங்களில் மூட்டு தேயாமல் இருக்க உயவு பொருளாக செயல்படும் மூட்டு திரவத்திலும் கூட குமிழ்கள் உருவாகலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் போறது மட்டுமே போதுமா? தனி உடற்பயிற்சி தேவையில்லையா?!
ஏன் நடக்கும்போது முழங்காலில் சத்தம் வருகிறது
இந்தக் காற்று குமிழ்கள் நடக்கும்போது அல்லது உட்காரும்போது உடைவதால் சத்தம் வருகிறது. இது இயல்பு. ஆனால் எப்போது இந்த சத்தத்தை பிரச்சயாக கருத வேண்டும் தெரியுமா? முழங்காலின் குருத்தெலும்பு தேய்மானம் காரணமாக சத்தம் வந்தால் நிச்சயம் மருத்துவ உதவி தேவை.
இதையும் படிங்க: காலை வாக்கிங் சருமத்திற்கு நல்லதா? பலருக்கும் தெரியாத விஷயம்!!
எலும்பு தேய்மானம்
குருத்தெலும்பு முழங்காலின் எலும்புகள் உராய்வதில் இருந்து பாதுகாக்கக் கூடிய மென்மையான அடுக்காகும். இவை முதுமை அல்லது அதிகமான உடற்செயல்பாடுகள் காரணமாக தேயலாம். இதை ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் என்கிறார்கள். முழங்கால்கள் வெறும் சத்தம் எழுப்புகின்றன ஆனால் வலியோ வீக்கமோ இல்லையென்றால் கவலைப்பட தேவையில்லை. இவை லேசான பயிற்சிகள், ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் சரியாகக் கூடியது. ஆனால் மூட்டுகள் க்ரீச் சத்தம் கேட்கும்போது வலி, வீக்கம், விறைப்பு, நடக்கும்போது சிரமமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.