வாக்கிங் போவது மட்டுமே போதுமா? தனி உடற்பயிற்சி தேவையில்லையா?!
வெறும் நடைபயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கும் போதுமான பயிற்சியாக இருக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Is That Only Walking Good Enough For Whole Body : நடைபயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கும் நல்ல உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4,000 காலடிகள் நடப்பது உங்களுடைய ஆயுளை அதிகரிக்கும். மரணத்திற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பதிவில் ஒட்டுமொத்த உடலுக்கும் வெறும் நடைபயிற்சி போதுமானதா? என்பது குறித்து காணலாம்.
நடைபயிற்சியின் நன்மைகள்
நடைபயிற்சி தீவிரமான உடற்பயிற்சி அல்ல என மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. உண்மைதில் நடைபயிற்சி நிரூபிக்கப்பட்ட உடல், மன ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. நடைபயிற்சி நல்ல உடற்பயிற்சியா? என கேட்டால் அதற்கு ஆமாம் என்பது தான் பதிலாக இருக்கும். எளிமையாக செய்யக் கூடிய தீவிரமான உடற்பயிற்சிதான் நடைபயிற்சி.
நடைபயிற்சி இதயத்திற்கு நன்மைகள்
2023ஆம் ஆண்டில் செய்த 2 புதிய ஆய்வுகளின்படி, ஒரு நாளில் 30 நிமிடங்கள் நடந்தால் இதய நோய், டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயம் குறைகிறது. தினமும் 10,000 காலடிகள் நடந்தால் ஒவ்வொரு 2,000 காலடிகளுக்கும் இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு 10% குறைவதாக ஆய்வு முடிவுகளில் சொல்லப்படுகிறது.
ஒரு நிமிடத்தில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?
வேகமான நடப்பது தனி நன்மைகளை கொண்டது. ஒரு நிமிடத்தில் 80 அடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலடிகளை எடுத்து வைத்தால் மோசமான நோய்க்கான அபாயத்தை கணிசமாக குறைக்கலாம். தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் அது எந்த வேகமாக இருப்பினும் மன அழுத்தம், உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். குறிப்பாக தூக்கத்தின் தரம் மேம்படும்.
நடைபயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?
எடை குறைக்க நடைபயிற்சி போதுமானது. சரியான உணவு பழக்கத்துடன் நடைபயிற்சி செய்தால் எடை இழப்பில் மிகப் பெரிய மாற்றத்தை காண்பீர்கள். சுமார் 35 முதல் 50 வயது பெண்கள் தினமும் நடைபயிற்சி செய்தால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
நடைபயிற்சி உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்துமா?
நாள்பட்ட நோய்களான சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைக்கவும், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவும் தினமும் நடைபயிற்சி செல்வது உதவுகிறது. எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க நடைபயிற்சி சிறந்த பயிற்சியாகும். உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை சீராக வைத்திருக்க நடைபயிற்சி செய்யலாம். இரவில் தூக்கத்தின் தரம் மேம்படுவது பல்வேறு நோய்களிலிருந்து நம்மளை தள்ளி வைக்கும். நடைபயிற்சி செய்யும் போது இரவில் நன்றாக தூக்கம் வரும். உங்களுடைய மூட்டுகளின் அடர்த்தி அதிகம் ஆகும். முதுகு மற்றும் மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் தினமும் நடந்தால் நாளடைவில் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தினமும் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
வெறும் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கும் அற்புதமான பயிற்சியாகும். எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் தினமும் கண்டிப்பாக நடக்கலாம். நடைபயிற்சியுடன் மற்ற பயிற்சிகளை செய்வது கூடுதல் நன்மைகளை தரும்.