MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காலை வாக்கிங் சருமத்திற்கு நல்லதா? பலருக்கும் தெரியாத விஷயம்!! 

காலை வாக்கிங் சருமத்திற்கு நல்லதா? பலருக்கும் தெரியாத விஷயம்!! 

காலையில் நடைபயிற்சி செல்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 24 2025, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

How Morning Walk Helps to Improve Skin Health : காலையில் நடைபயிற்சி செல்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என்பது நாம் அறிந்ததே. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி சிறந்ததாக இருக்கும். அதிலும் காலை இளம்வெயிலில் நடப்பது வைட்டமின் டி சத்து கிடைப்பதற்கு ஏதுவான நேரமாகும்.  கோடைகாலத்தில் அதிக நீரிழப்பை தடுக்க அதிகாலை வாக்கிங் செல்வது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் வாக்கிங் செல்வதால் சரும ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா இந்த பதிவில் நடைபயிற்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை காணலாம். 

25
Benefits of Morning Walk for Skin Health

Benefits of Morning Walk for Skin Health

சரும ஆரோக்கியம்:

காலை நடைப்பயிற்சியில் குறிப்பிடத்தகுந்த நன்மைகள் சருமத்தில் உணரப்படுகின்றன. தினமும் நடைபயிற்சி செல்வது உடலின் ரத்த ஓட்டத்தை  சீராக்கும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் சீராக செல்வதால் சருமத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.   காலை நடைப்பயிற்சியில்  எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ, அதன் மூலம் நச்சுகள் வெளியேறிவிடும். நச்சுக்கள் வெளியேறுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

35
Benefits of Morning Walk for Skin Health

Benefits of Morning Walk for Skin Health

தரமான தூக்கம்: 

காலையில் எழுந்ததும் சிறிது நேரம் வாக்கிங் செல்வதால்   மனம் அமைதியாகும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பகலில் சுறுசுறுப்பாக இயங்குவதால் இரவில் உடலுக்கு ஓய்வு தேவைப்படும். இரவில் சீக்கிரம் தூங்கம் வந்துவிடும். தரமான தூக்கம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான காரணியாகும்.  

இதையும் படிங்க:  ஆயுளை அதிகரிக்கும் 'வாக்கிங்'- எத்தனை நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா? 

45
Benefits of Morning Walk for Skin Health

Benefits of Morning Walk for Skin Health

செரிமானம் மேம்படும்: 

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தாங்குவதால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  உங்களுடைய செரிமான மண்டலம் நன்றாக செயல்பட்டு கழிவுகளை சரியாக வெளியேற்ற நடைபயிற்சி உதவும். வாக்கிங் உடலின் மைய, வயிற்று தசைகளை நன்கு செயல்படுத்துவதால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் செரிமானம் மேம்படுகிறது. 

இதையும் படிங்க:  தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் சென்றால் வயதானவர்கள் ஆயுள் அதிகரிக்கும் தெரியுமா? 

55
Benefits of Morning Walk for Skin Health

Benefits of Morning Walk for Skin Health

மன ஆரோக்கியம்: 

நீங்கள் மன அழுத்தத்தோடு காணப்படும் போது சருமம் டல்லாக தெரியும். சோர்வாக காணப்படுவீர்கள். தினமும் நடைபயிற்சி செய்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்துகிறது. இதனால் இரவில் நல்ல தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை என காணப்படுவீர்கள்.  உங்களுடைய சருமம் பளபளப்பாக தெரியும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சி குறிப்புகள்
நடைப்பயிற்சியின் நன்மைகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved