MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ஆயுளை அதிகரிக்கும் 'வாக்கிங்'- எத்தனை நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா? 

ஆயுளை அதிகரிக்கும் 'வாக்கிங்'- எத்தனை நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா? 

நடைபயிற்சி எத்தனை நிமிடங்கள் செல்வது ஆயுளை அதிகரிக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 23 2025, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Walking This Many Minutes Per Day Increase Your Lifetime : கொரோனாவுக்கு பிறகு நடைப்பயிற்சி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தினமும் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும்  மேம்படுத்தக்கூடிய பயிற்சியாகும். நடைபயிற்சி உடலில் பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து  ஆயுளை அதிகரிப்பதாக ஆய்வுகளும் காண்டறிந்துள்ளன. இதற்காக பல ஆயிரம் காலடிகளோ, பல மைல்களோ நடக்க வேண்டியதில்லை. சில நிமிடங்கள் நடப்பதே ஆயுளை அதிகரிக்குமாம். ​​

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
How Many Minutes of Walking Per Day?

How Many Minutes of Walking Per Day?

ஆய்வில் தகவல்: 

அண்மையில் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியான  மெட்டா பகுப்பாய்வு சில நிமிடங்கள் நடப்பதையும், ஆயுள் அதிகரிப்பையும் விளக்கிறது. இந்த ஆய்வில் 30 மில்லியனுக்கும் அதிகமானோரை கொண்டு  196 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் செயல்பாடு, ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு ஆய்வு செய்யப்பட்டது.  இதில் ஒரு வாரத்தில் 75 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆரம்பகால இறப்பின் ஆபத்துகள் 23 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

இதையும் படிங்க:  தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் சென்றால் வயதானவர்கள் ஆயுள் அதிகரிக்கும் தெரியுமா? 

35
How Many Minutes of Walking Per Day?

How Many Minutes of Walking Per Day?

தினமும் எவ்வளவு நேரம் வாக்கிங்? 

ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலக்குகளை பொறுத்து நடைபயிற்சி மாறுபடுகிறது.  எடையை குறைக்க நினைப்பவர் ஒரு மணி நேரம் வரை விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்காக நடக்க தொடங்குபவர் அதற்கேற்ற இலக்குகளை வைத்துக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட ஆய்வில் தினமும் 11 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தவர்களுக்கு இறப்பின் அபாயம் குறைந்துள்ளது. அவர்கள் வாரத்திற்கு 75 நிமிடங்கள் நிலையான வேகத்தில் நடப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

இதையும் படிங்க:  வெறும் '2' நிமிடங்கள் சாப்பிட்ட பின் வாக்கிங்!நீரிழிவு நோயை விரட்ட சூப்பர் டிப்ஸ்!! 

45
How Many Minutes of Walking Per Day?

How Many Minutes of Walking Per Day?

நடைபயிற்சி இலக்கு

வாரத்திற்கு 75 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது  உங்களுடைய ஆயுள் காலத்தை அதிகரிக்கும் என்பது ஆய்வில் சொல்லப்பட்ட உண்மையாக இருந்தாலும், ஒரு நாளைக்கு வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை. 11 நிமிடங்களுக்கு  நடப்பதை நிறுத்த வேண்டும் என இதை புரிந்து கொள்ளக் கூடாது. அதைப் போல ஒரு நாளைக்கு 5000 காலடிகளுக்கு குறைவாக நடப்பதால் எந்த பலன்களும் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. நடைபயிற்சி உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மிதமான பயிற்சியாகும். உங்களுக்கு எவ்வளவு நேரம் நடக்க முடியுமோ அவ்வளவு நேரம் நீங்கள் நடக்கலாம்.

 

55
How Many Minutes of Walking Per Day?

How Many Minutes of Walking Per Day?

தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். அது வெறும் நடைபயிற்சியாக இருந்தாலும் நல்லது தான்.  ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட காலடிகளை இலக்காகக் கொண்டு நடப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved