வெறும் '2' நிமிடங்கள் சாப்பிட்ட பின் வாக்கிங்!நீரிழிவு நோயை விரட்ட சூப்பர் டிப்ஸ்!!
தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடப்பதை விடவும் சாப்பிட்ட பின் 2 நிமிடங்கள் நடப்பது எவ்வளவு எளிதில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது என இந்தப் பதிவில் காணலாம்.

How 2 Minutes of Walk Post Meal Can Reduce Risk of Diabetes : இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உடற்பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. அலுவலக வேலை, வீட்டு வேலை என எப்போதும் தங்களை பிசியாக வைத்திருப்பவர்கள் எப்படி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்கமுடிவதில்லை. தினமும் சாப்பிட்ட பிறகு மதியம் தூங்குவது கூட சிலருக்கு வழக்கமாக இருக்கும். ஆனால் எங்கும் நகராமல் அமர்ந்தபடியே இருப்பது வளர்சிதை மாற்றத்தை மந்தப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். இதய ஆரோக்கியமும் சீர்குலையத் தொடங்கும். இதை தடுக்க ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்டப் பின்னரும் நடப்பதை பழக்கப்படுத்த வேண்டும். வெறும் 2 நிமிடங்கள் நடப்பது கூட உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர் இந்த பதிவில் அது குறித்து காணலாம். .
Benefits of Walking After Meals
சாப்பிட்டதும் நடைபயிற்சி:
சாப்பிட்டதும் உடனடியாக அமராமல் அல்லது தூங்காமல் நடப்பது வழக்கப்படுத்த வேண்டும் வெறும் இரண்டு நிமிடங்கள் என்பது வேடிக்கையாக தெரியலாம் ஆனால் இரண்டு நிமிடங்கள் நடப்பது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியது. நீங்கள் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டு இருந்தால் உங்களுடைய சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகரிக்கும். இதைத் தடுக்க உணவுக்கு பின்னர் 2 நிமிட நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் உணவுக்குப் பின் ராக்கெட் வேகத்தில் உயரும் இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
Benefits of Walking After Meals
ஆய்வில் தகவல்:
சில ஆண்டுகளுக்கு முன் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியான ஆய்வில், சாப்பிட்ட பின் 2 முதல் 5 நிமிடங்கள் குறுநடை போடுவர்களுக்கு, சாப்பிட்ட பின் அமர்ந்திருப்பவர்களை விட இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. சாப்பிட்டதும் அமராமல் நிற்பதும் கூட அதற்கு உதவும். ஆனால் நடப்பது சிறந்தது.
இதையும் படிங்க: வயசானவங்க வெறும் '5' நிமிஷங்கள் பின்னோக்கி நடப்பதால் இத்தனை நன்மைகளா?
Benefits of Walking After Meals
சாப்பிட்டது குறுநடை நன்மைகள்:
நடக்கும்போது கால், மைய தசைகள் இயங்கும். இதனால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. மதியம் சாப்பிட்ட பின் உடனடியாக நடந்தால் மந்தநிலையை தவிர்க்கலாம். சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
இதையும் படிங்க: தினமும் 1 கிமீ வாக்கிங்!! வெறும் 15 நிமிஷத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Benefits of Walking After Meals
நீரிழிவு நோய், இதய நோய் கட்டுப்பாடு:
இந்த இரண்டு நோய்களும் தொடர்பு கொண்டவை. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் இரத்த நாளங்கள், இரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியம் அனைத்திற்கும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவது நாளடைவில் இரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். அதனால் ஓய்வு நேரத்தில் நடைபயிற்சி செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தமும் குறையும்.
Benefits of Walking After Meals
எப்போது நடக்க வேண்டும்?
உணவுக்கு பின் 60 முதல் 90 நிமிடங்களுக்குள் வெறும் 2 நிமிடங்ள் தொடங்கி முடிந்தவரை நடக்கலாம். உணவுக்கு பின் எவ்வளவு சீக்கிரமாக நடக்கிறீர்களோ அவ்வளவுக்கு இரத்த சர்க்கரை அளவு உயர்வதை சரி செய்யலாம். குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் நடந்தால் நல்லது