Urinary Tract Infection: சிறுநீர்ப் பாதை தொற்றால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!
உடலில் அதிகமாக உப்பு சேர்வதால், சிறுநீரகப் பிரச்சனைகள் எளிதில் உருவாகி விடும். இதனை நாம் வருமுன்னரே தடுப்பது தான் மிகவும் சிறந்தது. இருப்பினும், தவறான உணவு முறையால், சிறு வயதினருக்கும் கூட இதன் பாதிப்புகள் வந்து விடுகிறது.
சிறுநீரகத் தொற்று
நம்மில் சிலர் அடிக்கடி சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாக்டீரியாக்கள் தான். சிறுநீர் குழாயின் வழியாக பாக்டீரியாக்கள் உள்நுழைந்து, இவை பரவத் தொடங்கி விடும். இப்படியாக பரவும் பாக்டீரியாக்கள் அந்த வழிகளில் தொற்றுக்களை உண்டாக்கி விடுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அடிக்கடி ஏற்படக் கூடும். இதனை தொடக்கத்திலேயே போக்குவது தான் நல்லது. இல்லையெனில், இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அவ்வகையில் தற்போது சிறுநீர்ப் பாதை தொற்றைச் சரி செய்யக் கூடிய ஒருசில எளிய வீட்டு வைத்திய முறைகளை இங்கே காண்போம்.
சிறுநீர்ப் பாதை தொற்றைச் குணப்படுத்தும் வைத்தியங்கள்
இரவில் கருப்பு உளுந்து இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒன்றிரண்டாக பொடி செய்து, ஒரு டம்ளர் ஜம்பிங்
தண்ணீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதன்பின் மறுநாள் காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தாலே சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலி, கடுப்பு மற்றும் எரிச்சல் குறைந்து விடும்.
தொடர்ச்சியாக கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்கும் நபர்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்ய முடியும். அதோடு பேரிக்காய் மற்றும் பச்சை பட்டாணி ஆகியவையும் சிறுநீர்ப் பாதை தொற்றை பாதுகாக்க உதவி புரிகிறது.
தினந்தோறும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சிறுநீர்த் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும்.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், சிறுநீர்ப் பாதை தொற்றை குறைக்க முடியும்.
ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து, தொடர்ச்சியாக குடித்து வந்தால் சிறுநீர்த் தொற்று மிகவும் வேகமாக குணமாக ஆரம்பிக்கும்.
இளநீரில் சீரகத்தை கலந்து குடிப்பதாலும் சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்.
வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் பனங்கற்கண்டைச் சேர்த்து, தினந்தோறும் இரவு வேளையில் குடித்து வந்தால், சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்.
சூடான தண்ணீரில் வெந்தயத்தை கொதிக்க வைத்து ஆறிய பிறகு, அதனை டீயாகக் குடித்து வரலாம்.