Asianet News TamilAsianet News Tamil

ஒரு முறை கேரளாவின் புகழ் வெஜ் சொதி செய்து பாருங்க!

வாருங்கள்! கேரளா ஸ்டைலில் வெஜ் சொதியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

How to make Kerala Style vegetable Sothi in Tamil
Author
First Published Jan 6, 2023, 8:44 AM IST

தினமும் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக புதுமையாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

பொதுவாக நாம் ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றிற்கு தேங்காய் பால், கார சட்னி அல்லது குருமா தான் பெரும்பாலும் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சற்று வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் 1 ரெசிபியை காண உள்ளோம். இதன் சுவை அருமையாக இருப்பதால் இதனை அடிக்கடி செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவர் . இது ஆப்பம்,இடியப்பம் ,சப்பாத்தி, பூரி என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

வாருங்கள்! கேரளா ஸ்டைலில் வெஜ் சொதியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • கேரட் - 1
  • பீன்ஸ் - 5
  • உருளைக்கிழங்கு - 1
  • பச்சை பட்டாணி - 1 கப்பட்டை - 1 சிறிய துண்டு
  • ஏலக்காய் - 2
  • வெங்காயம் - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
  • நீர் போன்ற தேங்காய் பால் - 2 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்

       இன்னும் வேண்டும் என்று சொல்ல வைக்கும் இறால் பெப்பர் ப்ரை!


செய்முறை:

முதலில் வெங்காயம்,கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை அலசி விட்டு,அவைகளை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு முதலில் கெட்டி தேங்காய்ப்பாலும்,பின் இரண்டாவது முறை கொஞ்சம் நீர் சேர்த்து நீரான தேங்காய் பாலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து தாளித்து பின்,அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு வதக்கி விட வேண்டும்.

இப்போது அரிந்து வைத்துள்ள பீன்ஸ்,கேரட், உருளைகிழங்கு, பச்சை பட்டாணி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிக் கொண்டு ,பின் தேங்காய் பால் ஊற்றி, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து காய்கறிகளை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் வெந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். இப்போது இரண்டாவது எடுத்த தேங்காய் பாலை ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு பரிமாறினால் கேரளா வெஜ் சொதி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios