Pyramid Walking : பிரமிடு வாக்கிங் பத்தி தெரியுமா? எடை குறைய சூப்பர் ட்ரிக்
பிரமிடு வாக்கிங் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி அவசியமான எளிமையான பயிற்சியாகும். தினமும் நடப்பது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் நல்லது. எடையை குறைக்க நடைபயிற்சி செய்வது சிறந்த பலன்களை தரும். இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். பிரமிடு வாக்கிங் சற்று வித்தியாசமானது.
பிரமிடு வாக்கிங்
முதலில் மெதுவாக நடக்கத் தொடங்கி பின் மெல்ல வேகத்தை அதிகரிக்க வேண்டும். பிரமிட்டின் வடிவத்தை மாதிரி வேகத்தை மாற்றி நடக்க வேண்டும். எடையை குறைக்க பிரமிடு வாக்கிங் செல்லலாம். படிப்படியாக வேகத்தை அதிகரித்து பின் மெதுவாக நடக்க வேண்டும். இந்த முறையில் சுமார் 20-25 நிமிடங்கள் நடக்கலாம். முதலில் 5 நிமிடங்கள் வேகம், அடுத்த 5 நிமிடங்கள் மெதுவாக இதை சுழற்சி முறையில் பின்பற்றலாம்.
பயன்கள்
அதிக கலோரிகளை பயன்படுத்துவதால் எடை குறையும். வழக்கமான நடைபயிற்சியை போல இல்லாமல் இது அபாரமான நன்மைகளை தரும். இதில் மாறி மாறி மிதமான மற்றும் வேகமான வேகத்தில் நடப்பதால் தசைகளை ஈடுபாட்டுடன் வைக்க உதவுகிறது. வேகத்தை கூட்டி குறைப்பதால் நல்ல கார்டியோ பயிற்சியாகவும் இருக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும்.
பிரமிடு வாக்கிங் கால்கள் மையத் தசைகள் திட்டம் ஆகியவற்றை வலுவாக்க உதவுகிறது உடலில் சகிப்புத்தன்மை மேம்படுத்த இந்த பயிற்சி உதவியாக இருக்கும் மூட்டுகளை வலுப்படுத்துவதோடு ஏற்கனவே மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.