- Home
- உடல்நலம்
- உடற்பயிற்சி
- Pebble Stone Walking: கூழாங்கல் மீது வாக்கிங்!! இந்த வர்ம நடைபாதை பற்றி தெரியுமா?
Pebble Stone Walking: கூழாங்கல் மீது வாக்கிங்!! இந்த வர்ம நடைபாதை பற்றி தெரியுமா?
கூழாங்கல் மீது நடைபயிற்சி செய்வது சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விஷயமாகும்.

Health Benefits of Pebble Stone Walking : நடைபயிற்சி உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியது. அதிலும் பல வகைகள் உள்ளன. ரேஸ் வாக்கிங், ரெட்ரோ வாக்கிங் என்ற வரிசையில் பெப்பிள் வாக்கிங் என்ற கூழாங்கள் வாக்கிங் -உம் குறிப்பிடத்தகுந்தது. இதை பற்றி சித்த மருத்துவத்தில் வர்ம நடைபாதை என குறிப்பிடுகிறார்கள். சித்த மருத்துவத்தில் உள்ள உட்பிரிவில் வர்மமும் ஒன்று. அதில் தான் ‘வர்ம நடைபாதை’ வருகிறது.
உடலில் உள்ள வர்மம் என்ற ஆற்றல் புள்ளிகளை செயல்படுத்த வர்மநடைபாதை உதவுகிறது. உள்ளங்காலில் காணப்படும் வர்மப் புள்ளிகள் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது தூண்டப்படுகின்றன. இதற்காக 8 வடிவத்தில் கூழாங்கற்கள் நிரப்பிய நடைபாதையை வீட்டில் அமைத்து கொள்ளலாம். வீட்டின் எந்த இடத்திலும் இதை அமைக்க முடியும். மாடி, தோட்டம், முன்புறம் என வசதிக்கேற்ற இடத்தில் 8 வடிவத்தில் வர்ம நடைபாதையை ஏற்படுத்தலாம். ஆற்றங்கரையிலும் சென்று நடக்கலாம்.
நன்மைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. முதியவர்கள் கூழாங்கற்கள் போடப்பட்ட நடைபாதையில் தினமும் நடந்தால் ரத்த அழுத்தம் கூட குறையுமாம். தினமும் 8 வடிவத்தில் நடப்பதால் எடையும் கட்டுக்குள் இருக்கும். வீட்டிலேயே இதை அமைத்து கொண்டால் நேரம் கிடைக்கும்போது நடந்து உடலை வலிமையாக்க முடியும். குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டும். வாத நோய்களை தடுக்கும்.
எப்படி அமைக்க வேண்டும்?
உங்கள் வீட்டில் 8 முதல் 10 அடி நீளத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். வடக்கு, தெற்கு பார்த்தபடி 8 வடிவத்தில் பாதை அமைக்கவேண்டும். அகலம் 6 அடியாக இருந்தால் நல்லது. இந்த பாதையில் கூழாங்கற்கள் போட்டு அதன் மீது மெல்ல நடக்கத் தொடங்கலாம். காலில் புண்கள் ஏதேனும் இல்லாவிட்டால் காலணி அணியாமலக. 10 நிமிடம் வலது, 10 நிமிடம் இடது என மாறி மாறி நடக்க வேண்டும்.
கவனம்! கவனம்!
சிலர் 8 வடிவ நடைபாதையை சிறியதாக அமைப்பார்கள். அப்படி செய்வதால் தலை சுற்றலாம். 6 அடிக்கு குறைவாக நடைபாதையை அமைக்கக் கூடாது. 10 அடி வரைக்கும் நடைபாதை ஏற்படுத்தினால் நடக்க இன்னும் வசதியாக இருக்கும். புதியதாக பயிற்சி செய்தால் நிதானமாக நடக்க வேண்டும். நாளடைவில் வேகமாக நடக்கலாம்.