MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!! 

நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!! 

நடைபயிற்சியை முடித்த பின்னர் ஏன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 01 2025, 08:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Should You Drink a Glass of Water After Walking? : நடைபயிற்சி செய்யும் போது உடலில் இருந்து ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உடல் இயக்கத்திற்கு ஏற்றவாறு வியர்வையும் வெளியேறுகிறது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து இழக்கப்படுகிறது. இதை ஈடுகட்ட நடைபயிற்சியை முடித்த பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வியர்வையால் வெளியேறிய  நீர்ச்சத்தை ஈடுகட்ட, நீரேற்றத்தை ஆதரிக்க போதுமான அளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அறிகுறிகள்:

அறிகுறிகள்:

உடலில் உள்ள தசை செயல்பாடு, ஆற்றல் நிலைகள், ஒட்டுமொத்த மீட்பு ஆகியவற்றுக்கு போதுமான நீரேற்றம் அவசியமானது.  இதை சரி செய்ய நடந்து முடித்த பின்னர் வசதியாக அமர்ந்தபடி தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் தலை வலி, மயக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். 

இதையும் படிங்க:  நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!! 

34
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

நடைபயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடித்தால் உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்து கிடைக்கும். அதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. வியர்வை மூலம் இழந்த நீர்ச்சத்தை பதிலீடு செய்ய போதுமான தண்ணீரைக் குடித்தால் போதும். காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். வாக்கிங் சென்று திருன்பிய பின்னர் 450 மிலி முதல் 500 மிலி வரை தண்ணீர் குடிக்கலாம். 

இதையும் படிங்க:  காலைல தண்ணீர் குடிக்கலாம்.. ஆனா வாக்கிங் போறப்ப தண்ணீர் குடிக்கலாமா? 

 

44
செய்யக் கூடாத தவறு;

செய்யக் கூடாத தவறு;

- நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த பின்னர் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என நினைக்காமல் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் மூளை அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். நடைபயிற்சி செய்யும்போது தொண்டையை நனைக்கும் அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதும். 

- நடந்து முடித்த பின்னர் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். தற்போது கோடைகாலம் என்பதால் கண்டிப்பாக உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதில் அலட்சியம் காட்டக்கூடாது. அதனால் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
நடந்த பின் குடிநீர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bitter Gourd: சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை! பாகற்காய் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்!
Recommended image2
Kidney stones: 1 மணி நேரம் சிறுநீரை அடக்கினால் என்னவாகும்? உடலுக்குள் நடக்கும் 'பகீர்' மாற்றங்கள்!
Recommended image3
Eye care routine : வசீகரிக்கும் அழகிய கண்களை பெற என்ன செய்யலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved