MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!! 

நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!! 

நடைபயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

1 Min read
Author : Kalai Selvi
Published : Mar 31 2025, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Things to Avoid While Walking : உடல்நலனை மேம்படுத்த  நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் நடக்கும்போது நான்கு முக்கிய விஷயங்களை கவனிக்கத் தவறினால் ஆரோக்கியத்தில் எதிர் விளைவுள் தான் ஏற்படும். நடைபயிற்சியில் தவறான கால் தசைகளைப் பயன்படுத்தக் கூடாது. கால்களை தூரமாக விரித்து நடப்பது, தலையை வைத்துள்ள விதம், கைகளை அசைக்காமல் நடப்பது உள்ளிட்டவை தவறானவையாகும். நடக்கும்போது அதில் கவனமாக இருக்க வேண்டும். 

24
தவறான விஷயம்:

தவறான விஷயம்:

அறிவியல் பூர்வமாக பார்க்கும்போது, நடைபயிற்சியில் செய்யும் தவறுகள் முதுகு வலி, மூட்டு வலி, உடல் தோரணையில் மாற்றம், குறைவான கலோரி எரிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் ரொம்ப தூரம் நடந்த பின் கீழ் முதுகில்  வலி வந்தால் தவறாக நடந்துள்ளதை காட்டுகிறது. நடக்கும்போது இடுப்பு நெகிழ்வு தசைகளை அதிகம் பயன்படுத்தும்போது ​​கீழ் முதுகில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி வரலாம். அதனால் சரியான தோரணையில் நிமிர்ந்து கைகளை வீசி நடங்கள். இதனால் வயிற்று தசைகள் இயங்கும். 

இதையும் படிங்க:  உடல் எடை குறைய! வெறும் வயிற்றில் தான் வாக்கிங் போகனுமா? 

34
கால்களை எப்படி வைக்க வேண்டும்?

கால்களை எப்படி வைக்க வேண்டும்?

நடக்கும்போது கால்களை முழுவதுமாக விரித்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை.   குதிகால், உள்ளங்கால் தரையில் படும்படி நடந்தால்போதும். கால்களை அகலமாக விரித்து நடப்பதால்  மூட்டுகளில், முழங்கால்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வலி ஏற்படும். கீழ் உடலின் தசைகளான இடுப்பு, மூட்டு, முழங்காள் சரியாக வேலை செய்வதைத் தடுக்கிறது.

இதையும் படிங்க:  வாக்கிங் போக சிறந்த நேரம் இதுவா!! காலை, மாலை, மதியம் எப்போது நடக்கலாம்? 

44
தலையின் நிலை (head position)

தலையின் நிலை (head position)

தரையை பார்த்தபடி குனிந்து நடப்பது, செல்போனைப் பார்ப்பது ஆகியவை தவறான போக்காகு.. இதனால் உடல்நலக் கோளாறுகள் வரலாம். பலர் தலையைக் குனிந்து நடக்கிறார்கள்.  இதனால் மேல் முதுகு வலி வரலாம். தலைகுனிந்து நடந்தால் முதுகுத்தண்டு பிரச்சனைகளுடன் உடலுக்குள் செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் மாறுகிறது. முதுகெலும்பை நேராக வைத்தபடி நிமிர்ந்து நடக்க வேண்டும். நேராக பார்க்க வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
நடைப்பயிற்சி தவறுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved