MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடல் எடை குறைய! வெறும் வயிற்றில் தான் வாக்கிங் போகனுமா? 

உடல் எடை குறைய! வெறும் வயிற்றில் தான் வாக்கிங் போகனுமா? 

வெறும் வயிற்றில் வாக்கிங் செல்வது உடல் எடை குறைய எவ்வாறு உதவுகிறது என இந்தப் பதில் காண்போம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 29 2025, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Walk Your Way to Weight Loss: The Benefits of Empty Stomach Walking : எடையை குறைக்க நடைபயிற்சி செய்வது எளிமையான ஒன்றாகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளுக்கும் நடைபயிற்சி உதவுகிறது.  பல ஆய்வுகளில் தினமும் நடைபயிற்சி செய்வதால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும் என தெரியவந்துள்ளது. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் அவருக்கு கணிசமான எடை குறையும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் நடப்பதால் அவருடைய கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு உடலில் கலோரி பற்றாக்குறையை உருவாக்கி  எடை குறைய செய்கிறது. வெறும் நடைபயிற்சி மட்டும்போதாது. ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மிலன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், சில வினாடிகள் நடப்பது கூட நன்மைகளை வழங்குகிறதாம். அதாவது வெறும் 10 வினாடிகள் வரை போடும் 'மைக்ரோ-வாக்கிங்' என்ற குறுநடை கூட ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவர் 10 முதல் 30 வினாடிகள் வரை வேகமாக நடக்கும்போதும் பலன் பெறுகிறார். 30 வினாடிகளுக்கு பின்  இடைவெளிவிட்டு மீண்டும் அதே போல நடக்க வேண்டும். இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் எடை விரைவில் குறையும். ஆனால் எடை குறைப்பு பயணத்தில் மற்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டிதாக உள்ளது. அது காலையில் எப்படி நடக்க வேண்டும்? என்பது தான். எடையை குறைக்க வெறும் வயிற்றில் தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டுமா? என்பதை குறித்து இங்கு காணலாம்.

35
வெறும் வயிற்றில் வாக்கிங்:

வெறும் வயிற்றில் வாக்கிங்:

எடையை குறைக்க விரும்பும் பலர் வெறும் வயிற்றில் தான் நடைபயிற்சி செய்கிறார்கள்.  காலையில் அதிகமான கலோரிகளை எரிக்க வெறும் வயிற்றில் நடப்பது உதவுவதாக பரவலாக ஒரு நம்பிக்கை உள்ளது. அது உண்மையும் கூட. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து எடை குறைய உதவுகிறது. 

இதையும் படிங்க:  வாக்கிங் vs ரன்னிங்  vs ஜாகிங்; எந்த வயசுக்கு எதை செய்யனும் தெரியுமா? 

45
எடை குறையும்!

எடை குறையும்!

காலையில் வெறும் வயிற்றில் நடந்தால் வளர்சிதை மாற்றம்  அதிகரித்து எடையைக் குறைக்க உதவும். ஆய்வுகள் கூட வெறும் வயிற்றில் நடப்பதால் உடல் எடை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக கரையும் என கூறுகின்றன. சர்வதேச உடல் பருமன் இதழில் வெளியான தகவல்களில், நடைபயிற்சி  உள்ளுறுப்பு கொழுப்பு திசுக்களைக் குறைக்க உதவுவதாக குறிப்பிட்டுள்ளது.  ஒரு வாரத்தில் மூன்று முறையாவது நடைபயிற்சி என 12 முதல் 16 வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் குறையும். மிதமான ஏரோபிக் பயிற்சியான நடைபயிற்சியை கூட 30 முதல் 60 நிமிடங்கள் செய்யலாம்.  

இதையும் படிங்க:  வாக்கிங் போக சிறந்த நேரம் இதுவா!! காலை, மாலை, மதியம் எப்போது நடக்கலாம்? 

55
தொப்பை குறையும்!

தொப்பை குறையும்!

தொப்பை கொழுப்பு அல்லது  எந்த கொழுப்பாக இருந்தாலும் நடக்கும்போது குறையும். அதிலும் வெறும் வயிற்றில் நடந்தால் அப்போது   தொப்பை கொழுப்பு மட்டுமல்ல உடலில் உள்ள எல்லா வகை கொழுப்பு குறையவும் உதவும். நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழக ஆய்வில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களை காட்டிலும் 70% அதிக கொழுப்பை எரிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved