- Home
- உடல்நலம்
- உணவு
- viral pink dosa: புரதம் நிறைந்த பிங்க் தோசை... பிள்ளைங்க இன்னும் 2 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
viral pink dosa: புரதம் நிறைந்த பிங்க் தோசை... பிள்ளைங்க இன்னும் 2 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
viral pink dosa: குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் சத்தான பிங்க் தோசை, இதை மட்டும் சேர்த்து செஞ்சு கொடுங்க பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் இந்தக் பிங்க் தோசை உங்கள் பிள்ளைகளின் நாளையும் கலர்ஃபுல்லாக மாற்றும்.

குழந்தைகளுக்கு பிடித்த பிங்க் தோசை
காலை உணவிற்கு என்ன சமைப்பது என்று யோசிப்பவர்களுக்கும், சத்தான உணவை விரும்புபவர்களுக்கும் இந்த பிங்க் தோசை ஒரு சிறந்த தேர்வாகும். வழக்கமான தோசை மாவு புளிக்க வைக்கும் சிரமம் இல்லாமல், வெறும் 10 நிமிடங்களில் இதனைச் சுலபமாகத் தயார் செய்துவிடலாம். முளைகட்டிய பச்சைப் பயறு மற்றும் பீட்ரூட் சேர்த்துச் செய்யப்படும் இந்தத் தோசையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இதன் அழகான பிங்க் நிறம் மிகவும் பிடிக்கும் என்பதால், சத்தான உணவை அவர்களுக்குக் கொடுப்பதற்கு இது ஒரு எளிய வழியாகும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய பச்சைப் பயறு
பீட்ரூட்
பச்சை மிளகாய்
பூண்டு
சீரகம்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
படி 1
ஒரு மிக்ஸி ஜாரில் முளைகட்டிய பச்சைப் பயறு, நறுக்கிய பீட்ரூட் துண்டுகள், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், சீரகம், கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக அரைத்து எடுக்கவும். பீட்ரூட் சேர்த்திருப்பதால் மாவு அழகான பிங்க் நிறத்தில் இருக்கும்.
படி 2
அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும், அரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து வட்டமாகத் தோசையாக ஊற்றவும். தோசையைச் சுற்றி சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான, சத்தான புரதம் நிறைந்த பிங்க் தோசை தயார். இதனைத் தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.















