MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Kothamalli Keerai Kadaiyal : மணக்க மணக்க கொத்தமல்லி கீரை கடையல்..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும் சுவை!

Kothamalli Keerai Kadaiyal : மணக்க மணக்க கொத்தமல்லி கீரை கடையல்..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும் சுவை!

Kothamalli Keerai Kadaiyal : கொத்தமல்லி கீரை, துவரம் பருப்பு, பூண்டு, வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான கொத்தமல்லி கீரை கடையல் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவையை அதிகரிக்கும் ரகசிய குறிப்புகள் இதோ.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 22 2026, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
கொத்தமல்லி கீரை கடையல்
Image Credit : This is a representative image generated using Gemini AI

கொத்தமல்லி கீரை கடையல்

தினமும் ஒரே மாதிரியான சாம்பார், குழம்பு, பொரியல் எனச் சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால், வீட்டில் இருக்கும் கொத்தமல்லி கீரையை வைத்து ஒருமுறை இந்த ருசியான கடையலைச் செய்து பாருங்கள். மணம் மாறாத பச்சை கொத்தமல்லி கீரை, நன்கு வெந்த துவரம் பருப்பு, பூண்டு, வெங்காயம், தக்காளி என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கொடுக்கும் சுவையே தனி.

குறிப்பாக, சூடான சாதத்தில் இந்தக் கடையலைப் போட்டு சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால், அதன் ருசிக்கு ஈடே இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கொத்தமல்லி கீரை கடையல், மதிய உணவுக்கு மிகவும் பொருத்தமானது.

குறைந்த நேரத்தில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்தே சுவையான இந்தக் கடையலை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
கொத்தமல்லி கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்
Image Credit : This is a representative image generated using Gemini AI

கொத்தமல்லி கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1\2 கப்
  • கொத்தமல்லி கீரை- 1 கட்டு
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பூண்டு - 5 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1\2 டீஸ்பூன்
  • தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு


தாளிக்க தேவையான பொருட்கள்

  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - 5 முதல் 6
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - 1 முதல் 2 டீஸ்பூன்
311
கொத்தமல்லி கீரை கடையல் செய்வது எப்படி? படி 1
Image Credit : This is a representative image generated using Gemini AI

கொத்தமல்லி கீரை கடையல் செய்வது எப்படி? படி 1

பருப்பை வேகவைத்தல்

முதலில் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 முதல் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு நன்கு குழைந்து வெந்ததும் அதைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

411
படி 2
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 2

காய்கறிகளை வதக்குதல்

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

511
படி 3
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 3

மசாலா சேர்த்தல்

அடுத்து கடாயில் தனியாத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

611
படி 4
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 4

கொத்தமல்லி கீரை சேர்த்தல்

இப்போது நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழையைச் சேர்க்கவும். கொத்தமல்லியின் நிறமும் மணமும் மாறாமல் இருக்க சுமார் 2 நிமிடங்கள் மட்டும் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

711
படி 5
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 5

பருப்புடன் கலந்து கடைதல்

ஏற்கெனவே வேகவைத்து வைத்துள்ள துவரம் பருப்பில் இந்த வதக்கிய கொத்தமல்லி கீரை கலவையைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

811
படி 6
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 6

பின்னர் மத்து அல்லது கடையும் கரண்டி கொண்டு பருப்பு மற்றும் கீரை கலவையை நன்றாகக் கடைந்து கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவையான பதத்திற்கு கொண்டு வரலாம்.

911
படி 7
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 7

தாளித்தல்

இறுதியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இந்தத் தாளிப்பைத் தயாராக உள்ள கொத்தமல்லி கீரை கடையலில் கொட்டி நன்றாகக் கலக்கவும். சுவையான கொத்தமல்லி கீரை கடையல் தயார்.

1011
கொத்தமல்லி கீரை கடையல் சுவையாக வர சில குறிப்புகள்
Image Credit : This is a representative image generated using Gemini AI

கொத்தமல்லி கீரை கடையல் சுவையாக வர சில குறிப்புகள்

  • கொத்தமல்லி கீரையைச் சேர்ப்பதற்கு முன்பு மண் இல்லாமல் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
  • கீரையை நீண்ட நேரம் வதக்க வேண்டாம். 2 நிமிடங்கள் வதக்கினாலே போதுமானது.
  • பூண்டு சற்று அதிகமாகச் சேர்த்தால் கடையலுக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
  • காரம் குறைவாக விரும்புபவர்கள் மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
  • பருப்பை நன்றாக வேகவைத்துக் கடைந்தால் கடையல் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
  • இறுதியில் சிறிதளவு நெய் சேர்த்தால் கூடுதல் மணம் கிடைக்கும்.
1111
கொத்தமல்லி கீரை கடையலுக்கு என்ன தொட்டுக்கொள்ளலாம்?
Image Credit : This is a representative image generated using Gemini AI

கொத்தமல்லி கீரை கடையலுக்கு என்ன தொட்டுக்கொள்ளலாம்?

இந்தக் கடையலைச் சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கீழே உள்ளவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

  • உருளைக்கிழங்கு வறுவல்
  • அப்பளம்
  • உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • முட்டை பொரியல்
  • சுட்ட அப்பளம்
  • ஊறுகாய்


சுவையான மதிய உணவுக்கு ஒரு சிறந்த தேர்வு! எளிமையான பொருட்களில், குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்தக் கொத்தமல்லி கீரை கடையலை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள். சாதத்துடன் மட்டுமல்லாமல், ரசம் சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு சிறிய அளவு தொட்டுக்கொள்ளவும் அருமையாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Famous bread sweet: சாதாரண பிரெட் இவ்வளவு ருசியான இனிப்பாக மாறுமா? ஹைதராபாத்தின் புகழ்பெற்ற டபுள் கா மீத்தா!
Recommended image2
7 Healthy snacks for a week: உப்புக்கடலை டூ பொட்டுக்கடலை... தினமும் ஒரு ஸ்நாக்ஸ்!
Recommended image3
Sunday special karisoru recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி... மதுரை ஃபேமஸ் கறிச்சோறு இப்படி ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
kollu thuvaiyal : பாட்டி காலத்து பாரம்பரிய கான துவையல்! கொள்ளு, பூண்டு சேர்த்து இப்படி செஞ்சு பாருங்க!
Recommended image2
Parangikai Thuvaiyal : சுவையான பரங்கிக்காய் துவையல் ..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved