MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • துணையை ஏமாற்றுவதற்கும் கள்ள உறவுக்கும் இதெல்லாம் தான் முக்கிய காரணங்களாம்..

துணையை ஏமாற்றுவதற்கும் கள்ள உறவுக்கும் இதெல்லாம் தான் முக்கிய காரணங்களாம்..

சிலர் தங்கள் துணைக்கு தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Feb 29 2024, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தியா ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். மேலும் இந்தியாவில் திருமணம் என்பது புனிதமான உறவாக கருதப்படுகிறது.. ஆனால் சமீப காலமாக நாட்டில் திருமணத்தை மீறிய கள்ள உறவுகள் அதிகரித்து வருகின்றன. பலர் தங்கள் துணைக்கு துரோகம் செய்துவிட்டு தகாத உறவில் ஈடுபடுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் துணைக்கு தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

தம்பதிகளுக்கு இடையே உணர்வு ரீதியான பிணைப்பு இல்லாததும் திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவில் ஈடுபடத் தூண்டும் முதன்மை காரணங்களில் ஒன்றாகும். தங்களின் திருமணப் பிணைப்புகளுக்குள் உணர்ச்சி ரீதியான துண்டிப்பு இருந்தால், தங்கள் துனை தங்களை உணர்வு ரீதியாக புறக்கணிப்பதாகவும், அல்லது அதிருப்தி உணர்வையும் அனுபவிக்கின்றனர். எனவே அவர்கள் திருமணத்தின் உறவை மீறி வெளியே ஆறுதல் தேடலாம், புரிதல், பச்சாதாபம் மற்றும் தோழமையை யாராவது வழங்கினால் போதும் எளிதில் கள்ள உறவில் சிக்கிக்கொள்கின்றனர். 

36

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கான மற்றொரு பரவலான காரணங்களில் பாலியல் ரீதியான அதிருப்தியும் ஒரு காரணம். தங்கள் துணை உடனான பாலியல் உறவில் திருப்தி இல்லை எனில்,  அவர்களை வேறு இடங்களில் திருப்தி அடையத் நினைக்கலாம். புதுமை, உற்சாகம் போன்ற தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்த திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை சந்திக்க தேடும்.

46

சில சந்தர்ப்பங்களில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக உருவாகின்றன. தொழில்முறை ஈடுபாடுகள், சமூக வட்டங்கள் அல்லது ஆன்லைன் சேட்டிங் போன்ற சூழல்களில் தனிநபர்கள் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட காரணமாக அமையலாம். வசீகரம், போதிய எல்லைகள் வகுக்காதது அல்லது சுயக்கட்டுப்பாட்டின் குறைபாடு ஆகியவற்றுடன் சேர்ந்து திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும்.

56

திருமண உறவில் இருக்கும் தொடர் மோதல்கள் அல்லது அதிருப்தி உணர்வு ஆகியவை திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் தஞ்சம் அடைய தனிநபர்களைத் தூண்டுகின்றன.. திருமணத்திற்குள் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றை தீர்ப்பதற்கு பதிலாக, சில தனிநபர்கள் ஒரு சமாளிப்பு செயல்முறையாக திருமணத்தை மீறிய உறவை நாடுகின்றனர். திருமணத்திற்குப் புறம்பானன துணையால் வழங்கப்படும் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான நெருக்கம், திருமண வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தங்களை மீட்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

 

66

ஏக்கம், போதாமை, பாதுகாப்பின்மை அல்லது சுய மதிப்புக் குறைதல் போன்ற உணர்வுகளுடன் போராடும் நபர்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உறுதிமொழியை நாடலாம். திருமணத்திற்குப் புறம்பான துணையால் வழங்கப்படும் கவனம், பாராட்டு மற்றும் அன்பு, பாசம் அவர்களின் சுயமரியாதையை தற்காலிகமாக உயர்த்தி, அவர்களின் திருமண வரம்புகளுக்குள் இல்லாத கொடுக்கும் உணர்வை கொடுக்கும். இதனால் திருமணத்தை மீறிய உறவை விரும்புகின்றனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved