MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டபுள் ஆக்‌ஷனில் விஜய்... புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் ஆக வெளிவந்த தளபதியின் GOAT பட பர்ஸ்ட் லுக்

டபுள் ஆக்‌ஷனில் விஜய்... புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் ஆக வெளிவந்த தளபதியின் GOAT பட பர்ஸ்ட் லுக்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Dec 31 2023, 06:16 PM IST| Updated : Dec 31 2023, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
goat first look

goat first look

லியோ படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற புதுமுக நடிகை நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது.

24
Thalapathy 68 vijay

Thalapathy 68 vijay

தளபதி 68 திரைப்படத்தில் விஜய் உடன் அஜ்மல், நிதின் சத்யா, மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், பிரேம்ஜி, லைலா, சினேகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்திலும் நடைபெற்றதை, அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பை அண்மையில் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடத்தி முடித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
venkat prabhu, vijay

venkat prabhu, vijay

தற்போது புத்தாண்டு விடுமுறைக்காக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முடிந்ததும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான லொகேஷன் தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் வெங்கட் பிரபு ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

44
Thalapathy 68 titled as goat

Thalapathy 68 titled as goat

இந்த போஸ்டரில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் வருவது போன்ற போட்டோ இடம்பெற்று உள்ளது. இப்படத்திற்கு The Greatest Of All Time (GOAT) என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் விஜய் இரண்டு வேடங்களும் விமானி கெட்டப்பில் இருப்பதால் இது அவர் பைலட் ஆக நடித்திருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக டீ ஏஜிங் முறையை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜே பார்வதியா இது.... முரட்டு கவர்ச்சியில் மிரட்டலாக நடத்திய வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved