Nayanthara: நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்கி! விலை மட்டும் இத்தனை கோடியா?
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.
Nayanthara with shivan
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது, விக்கி - நயன் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. காதலை வெளியில் சொல்லாமல்... சில வருடங்கள் இருவரும், டேட்டிங் செய்து வந்த நிலையில் பின்னர் விஷயம் அப்பட்டமாக வெளியே கசிந்த பின்னர் ஓப்பனாக ஒப்புக்கொண்டனர்.
சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்ததை தொடர்ந்து, கடந்தாண்டு ஜூன் மாதம், இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
Actress Nayanthara
இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில், பின்னர் இவர்கள் தங்கள் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை Netflix OTT தளத்துக்கு வழங்கியதால், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல்... கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித்தின் குடும்பம், சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி, அட்லி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நயன்தாரா, தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
Nayanthara
அதே போல் ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு புறம் தயாரிப்பு என திரையுலகில் கணவருடன் கை கோர்த்து கலக்கி கொண்டிருக்கும் நயன், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு காஸ்டலி கார் ஒன்றை பரிசாக அளித்ததாக தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மெர்சிடிஸ் மேபேக் நிறுவனத்தின், இந்த கார் சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D