Vijayakanth Net Worth: கட்சிக்காக சொத்தை இழந்து... மக்களை உயிராக நினைக்கும் கேப்டனின் சொத்து மதிப்பு விவரம்!
பிரபல அரசியல்வாதியும், திரையுலக பிரபலமுமான கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
90-களில், தமிழ் சினிமாவில் கருப்பு தங்கமாக திரைப்படங்களில் ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆகியோருக்கு நிகராக சம்பளம் வாங்கிய விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் மினி ஜேம்ஸ் பாண்டு என்று புகழப்படும் அளவுக்கு, மிகவும் நேர்த்தியாக ஆக்ஷன் சாகச படங்களை தேர்வு செய்து நடித்து, கேப்டன் என கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். நடிப்பை தாண்டி, தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தவர்.
கோலிவுட் திரையுலகில் மினி ஜேம்ஸ் பாண்டு என்று புகழப்படும் அளவுக்கு, மிகவும் நேர்த்தியாக ஆக்ஷன் சாகச படங்களை தேர்வு செய்து நடித்து, கேப்டன் என கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். நடிப்பை தாண்டி, தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தவர்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் கால் பதித்து... தமிழ் சினிமாவில் ஹீரோவாக உயர்ந்த இவர்... ரீல் லைஃபில் மட்டும் இன்றி, ரியல் லைஃபிலும் ஹீரோவாக வாழ்ந்தவர். தன்னை ஒரு மக்கள் காப்பாளனாக பிரதிபலிக்கும் வகையில் இவர் நடித்த, ரமணா, கேப்டன் பிரபாகரன், சுதேசி, அரசாங்கம், போன்ற படங்கள்... மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
டாப் நடிகராக இருக்கும் போதே அரசியலில் குதித்த விஜயகாந்த்... தன்னுடைய கட்சியை துவங்க பணம் இல்லாததால், சொத்துக்களை விற்று தான் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டார். மேலும் தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு அள்ளிக்கொடு சிரிக்க வைத்து அழகு பார்க்கும் உன்னதமான மனிதர் விஜயகாந்த்.
விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. கூட்டணி வைத்து வெற்றிபெற்றாலும், இடையில் ஜெயலலிதாவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு தனியாக பிரிந்து எதிர்க்கட்சியாக செயல்பட்டார் விஜயகாந்த். தற்போது தேமுதிக கட்சி, மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால்... மீண்டும் கட்சியை எழுச்சி பெற வைக்க... பிரேமலதா விஜயகாந்த், மற்றும் அவரின் மகன்கள் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகாவின் நகர்வு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நம்ப கருப்பு தங்கம்... கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு காலத்தில் விஜய் - அஜித்தை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிய இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி தான் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் வீடு, கோயம்பேட்டில் பல ஏக்கரில் கட்சி அலுவலகம், திருமண மண்டபம் போன்றவை உள்ளது. எனவே சமூக வலைத்தளத்தில் இவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
vijayakanth
கேப்டன் விஜயகாந்த் பல வருடமாக உடல்நலம் குன்றி தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த்... கடந்த வாரம் மீண்டும் சளி பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டார். இதுநாள் வரை அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், நுரையீரல் சிகிச்சை அவருக்கு தேவைப்படுவதாகவும், 14 நாள் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும்...என்றும் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் இன்று காலை முதல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D