- Home
- Gallery
- Top 10 Actress: 2023-ஆம் ஆண்டில் ரசிகர்கள் மனதை கவர்த்திழுந்த டாப் 10 சீரியல் நாயகிகள் யார் யார்.. தெரியுமா?
Top 10 Actress: 2023-ஆம் ஆண்டில் ரசிகர்கள் மனதை கவர்த்திழுந்த டாப் 10 சீரியல் நாயகிகள் யார் யார்.. தெரியுமா?
வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு நிகராக, சின்னத்திரை நடிகைகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் ஹீரோயின்கள் யார் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் சுஜிதா தனுஷ். இவர் சமீபத்தில் நிறைவடைந்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல முன்னணி ஹீரோக்களுடன் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள சுஜிதா திருமணத்திற்கு பின்னர், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள மற்றொரு நடிகை, 'எதிர்நீச்சல்' சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா ஷெட்டி. பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து இந்த சீரியலில் குரல் கொடுத்து வரும் மதுமிதா, இந்த சீரியலுக்கு ஈடுபடுவாரா? என்று ஆரம்பத்தில் ரசிகர்கள் நினைத்த நிலையில்... தற்போது அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு, தன்னுடைய நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறார்.
இளம் ஹீரோவுக்கு அடித்த ஜாக்பாட்! லோகேஷ் கனகராஜ் நிறுவனத்துடன் கை கோர்த்த முதல் நாயகன் யார் தெரியுமா?
Baakiyalakshmi suchithra
இவரைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில், பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ரெட்டி பல ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக உள்ளார். இவரும் இந்த ஆண்டிற்கான டாப் 10 சீரியல் நடிகைகள் லிஸ்டில் இடப்பிடித்துள்ளார்.
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில், மிதமான அழகில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கோமதி பிரியா, ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல் நாயகிகள் லிஸ்டில் இணைந்துள்ளார்.
இந்த டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ள மற்றொரு நடிகை, ஹரிப்பிரியா இசை இவர் தொகுப்பாளராக மட்டுமின்றி ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கல்யாண முதல் காதல் வரை, என பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்று நடித்துவரும் நந்தினி கதாபாத்திரம், 2023-ஆம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நாயகிகள் லிஸ்டில் இணைந்துள்ளது.
இவரை தொடர்ந்து, 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். டி ஆர் பி-யில் தொடந்து டாப் 3 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த சீரியலின் நாயகியான சைத்ராவும் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
sundhari
அதே போல் டார்க் ஸ்கின் அழகியான கேப்ரியல்லா செலஸ், இந்த வருடத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மட்டுமின்றி, டிக் டாக் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
Kaniha
தல அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்த நடிகை கனிகா, முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமான சீரியல் எதிர்நீச்சல். ஈஸ்வரி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், ரசிகர்கள் மத்தியில்அதிகம் விரும்ப படும் டாப் 10 சீரியல் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Alya Mansa
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெற்று கொண்ட பின்னரும், தன்னுடைய நடிப்பு ஆர்வத்திற்கு யாரும் தடை போட முடியாது, என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பிரபலம் நடிகை ஆலியா மானசா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நாயகியாக நடித்து வரும் இவர், 2023 ஆம் ஆண்டின் டாப் 10 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.
இறுதியாக ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த நாயகி இடத்தை கைப்பற்றியுள்ளவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?