பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய அக்ஷயா மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி, 18 போட்டியாளர்களின் ஆட்டம் - பாட்டத்துடன் பிரமாண்டமாக துவங்கியது. பொதுவாக மற்ற பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிகளில், அந்த நிகழ்ச்சி ஆரம்பித்த 1 வாரம் கழித்து தான் போட்டியாளர்கள் சண்டை போட துவங்குவார்கள். ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது.
மேலும் நாமினேஷன் படலம் இரண்டாம் வாரத்தில் துவங்கப்பட்டு, முதல் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். ஆனால் இம்முறை... பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரமே நாமினேஷன் ஆரம்பித்தது மட்டும் இன்றி, முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.
மிக குறுகிய நாட்களில் தன்னுடைய பிக்பாஸ் பயணம் முடிவடையும் என்பதை யூகித்து கூட பார்க்கமுடியவில்லை என, தன்னுடைய கவலையை கமல் முன் வெளியப்படுத்தினார். இவரை தொடர்ந்து மிகவும் ஸ்ட்ராங் பிளேயராக பார்க்கப்பட்ட விஜய் வர்மாவும் சில வாரங்களில் வெளியேறினார். இவர் கொடுத்த பேட்டியில் ஒன்றில்... மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதனை தக்கவைத்து கொள்வேன் என பேசினார்.
BB Tamil 7
பிக்பாஸின் இரண்டாவது வாய்ப்புக்காக கார்த்திருந்தக இந்த இரு போட்டியாளர்களுக்கும், மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் இடையே பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு... அந்த டாஸ்கில் அவர்கள் தோற்றதால், அக்ஷயா - பிராவோ ஆகிய இரண்டு போட்டியாளர்களை வெளியே அனுப்பிய கையேடு, விஜய் வர்மா - அனன்யா ராவ் ஆகிய இரண்டு பழைய போட்டியாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய... அக்ஷயா மற்றும் ப்ரோ ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷயா ஒரு நாளைக்கு ரூபாய் 15,000 வீதம் சம்பளமாக பெற்றுள்ளார். சுமார் 55 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளதால்... 8 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.
பிராவோ ஒரு நாளைக்கு ரூபாய் 12,000 சம்பளமாக பெற்று வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் 28-ஆவது நாளில் வயல்கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த நிலையில்... 20 நாட்களுக்கு மேல் இருந்ததால் 2.50 லட்சம் அரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D